பாடசாலை வரலாற்றில் ஐந்து வருடங்களின் பிறகு சாதனை.ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பாடசாலையான ம. மா.ஹங். மெரிகோல்ட் தமிழ் வித்தியாலயம்.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் தமிழ் மொழிப்பாடசாலைகளில் இரண்டு மாணவர்கள் ஒரே தடவையில் வெட்டுப்புள்ளிக்கு மேலான புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அத்தோடு பதினொரு மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றியதோடு
வெட்டுப்புள்ளிக்கு மேல் இரண்டு மாணவர்களும்,100 புள்ளிகளுக்கு மேல் 07மாணவர்களும்,70- 100 புள்ளிகள் வரை 3 மாணவர்களும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
அத்தோடு இவ்வாறான வரலாற்று சித்தியினை மாணவர்களை சிறப்பாக வழிப்படுத்திய வகுப்பாசிரியர் S. மனோஜ்குமார் அவர்களை மெரிகோல்ட் தமிழ் வித்தியாலய அதிபர் ,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் அனைவரும் இவர்களை வாழ்த்துவதில் பெருமைக்கொள்கிறது.
பாடசாலை சமூகம்

