வெளிவந்த சாதாரண தர பெறுபேறுகளின் படி அக்கரபத்தனை டொரின்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் 100சதவீத பெறுபேறுகளைப் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.
முதல் தடவையாக சாதாரண தரம் வரை உயர்த்தப்பட்ட பாடசாலையில் முதல் தடவையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப்பாடத்தில் 100 வீதமும் ,தமிழ் பாடத்தில் 100 வீதமும் ஆங்கில பாடத்தில் 96 வீதமும் ஏனைய பாடங்களிழும் 90க்கும் மேற்பட்ட வீதங்களையும் பெற்று மாணவர்கள் சாதனைப்படைத்துள்ளனர.
குறித்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ,கற்பித்த ஆசிரியர்களான ஜோன்கென்னடி ,செல்வகுமார் ,நிரன்ஜன் மற்றும் ஏனைய ஆசிரியர்களையும், அதிபரையும் பழையமாணவர்கள் உட்பட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிதுவருகின்றனர் .மலையகம் .lk குழுமமும் வாழ்த்துக்களை பதிவுசெய்கிறது.
