மலையகப் பிராந்தியங்களில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக, நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை – செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை – விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விடுமுறை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.டி. திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
