நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன், 440க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
இதனிடையே, நிலச்சரிவு அபாயம் காரணமாக கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்கிறது.
தொடருந்து பாதைகளில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக, ரம்புக்கனையில் இருந்து நானுஓயா வரையிலும், கண்டியில் இருந்து மாத்தளை வரையிலும் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, நாட்டின் 11 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடிநீர் தட்டப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
