இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குழந்தை ஒன்றின் பராமரிப்புச் செலவு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
எனினும், சமிக்க கருணாரத்ன தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார். அவர் தேசியக் கடமை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள விடயம் நீதிமன்றத்திற்கு முறையாக அறிவிக்கப்படாதமையினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
தன் மீதான தந்தைத்துவக் குற்றச்சாட்டை சமிக்க கருணாரத்ன முற்றாக மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
