எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பணச்சலவை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா முப்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்துள்ள நீதிமன்றம், இது தொடர்பில் குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழகின் சாட்சிகளுக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையையும் நீதவான் விதித்துள்ளார்.
