நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
