ஹப்புத்தளை நகரில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தினால் குறித்த இரு வீடுகளுக்கும் பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இப்பகுதியில் நீடிக்கும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாகப் பிரதான வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ஹப்புத்தளை – வியாரகல பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது திடீரெனப் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததில், அந்த முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன், சாரதி மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாகத் உயிர் தப்பியுள்ளனர்.
