Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

October 22, 2026

வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

October 22, 2026

மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

October 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு
Breaking

வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

ThanaBy ThanaOctober 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

போக்குவரத்து அமைச்சு, இராணுவம் மற்றும் ‘Clean Sri Lanka’ செயலகத்தின் கூட்டுத் திட்டம்; இது மண்சரிவு அல்ல என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) விளக்கம்!

கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட அசம்பாவிதத்தினால் கடுமையாகச் சேதமடைந்த மலையகப் புகையிரதப் பாதையிலுள்ள வட்டவளை புகையிரத நிலையத்தை மீளமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தற்காலிக நடவடிக்கைகளுக்காக தற்போது வேறொரு கட்டிடம் அமைக்கப்பட்டு வருவதுடன், சேதமடைந்த புகையிரத நிலையத்தைப் புனரமைக்கும் பணிகளும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டமானது போக்குவரத்து அமைச்சு, ‘Clean Sri Lanka’ செயலகம், இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை புகையிரதத் திணைக்களம் ஆகியவை இணைந்து கூட்டுத் திட்டமாக முன்னெடுக்கவுள்ளன.

கடந்த 2026 ஆகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலைமை காரணமாக, மலையகப் புகையிரதப் பாதையில் அமைந்துள்ள பழமையான வட்டவளை புகையிரத நிலையத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டது. நிலையத்திற்குப் பின்புறமுள்ள சரிவுப் பகுதி நிலையற்றதாகி, அங்கிருந்த மண் பகுதி புகையிரத நிலையக் கட்டிடத்தின் மீது விழுந்தமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வட்டவளையில் பதிவான இச்சரிவு நிலையற்ற தன்மை அடைந்தமையானது சாதாரணமான ‘மண்சரிவு’ (Landslide) நிலைமை அல்ல என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRI) நுவரெலியா மாவட்ட பிரதான புவியியலாளர் புத்திக விஜேகோன் தெரிவித்தார்.

வட்டவளை புகையிரத நிலையத்தைப் புனரமைப்பதற்காக அவ்வளாகத்தில் இன்று நடைபெற்ற கள ஆய்வில் கலந்துகொண்டபோதே அவர் ஊடகங்களுக்கு இந்த விளக்கத்தை அளித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

    October 22, 2026

    சவூதியின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

    October 22, 2026

    கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!

    October 22, 2026

    கொட்டகலை பிரதேச சபையில் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கௌரவம்!

    October 22, 2026
    Editors Picks

    சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

    October 22, 2026

    வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

    October 22, 2026

    மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

    October 22, 2026

    சவூதியின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

    October 22, 2026

    சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

    October 22, 2026

    வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

    October 22, 2026

    மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

    October 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.