ஹட்டன் – டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் இன்று (26) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
12 வீடுகளைக் கொண்ட குறித்த தொடர் குடியிருப்பின் ஒரு பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள், ஹட்டன் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து உடனடியாகச் தொழிற்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் ஏனைய 9 வீடுகளுக்கும் தீ பரவுவது தடுக்கப்பட்டது.
இத்தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த வீட்டு உபகரணங்கள், சான்றிதழ்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட அனைத்துத் தனிப்பட்ட உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் காவல்துறையினர், மின் கசிவு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.
