எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (28) கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கை எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் குழாம், அன்றைய தினமும் சந்தேகநபரைச் சிறைச்சாலை அதிகாரிகளினூடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டது.
