பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் நாளை ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் என அச்சம்மேளனத்தின் பொதுச்செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
விரிவுரையாளர் பற்றாக்குறை, அதிக பணிச்சுமை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன், பணிப்புறக்கணிப்புக்கு இணையாக நாளை பேரணி ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
