2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பங்காளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெற்றது. இக்கூட்டத்தின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படம் நீர்மட்டம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) வானிலை நிலவரங்களின் கீழ் கணிக்கப்பட்டதை விட அதிகமான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமையைக் கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
