இலங்கையில் டிக் டாக் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, கடந்த ஆறு மாதங்களில் 8 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.
டிக் டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இதன்படி, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 446 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.
சமுதாய வழிகாட்டுதல்களை மீறுதல், ஆபத்தான சவால்கள் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் போன்ற காரணங்களுக்காகவே சர்வதேச அளவில் பெரும்பாலான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக டிக் டாக் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தவறாக நீக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 33 ஆயிரத்திற்கும் அதிகமான வீடியோக்கள், பரிசீலனைக்குப் பிறகு மீண்டும் பதிவேற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
News sourc newswire
