ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம இன்று உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
