Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

November 6, 2026

இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

November 6, 2026

ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

November 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்
Breaking

காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

ThanaBy ThanaNovember 6, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

யார், யாரை ஏமாற்றுகிறீர்கள், தோழர்களே? –மனோ கேள்வி “மலையக தரிசு நிலம்” பற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA)யின் திட்டவட்டமான நிலைப்பாடு, இதுதான்! என மனோ கணேசன் MP தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது;

1) 2022 ஆம் ஆண்டு தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) வெளியிட்ட மலையக சாசனத்தில் (Malaiyaha Charter), பெருந்தோட்ட தரிசு காணிகளை மலையக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். 

 

2)ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவுடன் நாம் இந்த சாசன அடிப்படையிலேயே, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நம் தலைவரும், பிரதி தலைவர்களும் கைச்சாத்திட்டனர்.

 

3) 2023 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்திலும், பெருந்தோட்ட தரிசு காணிகளை மலையக மக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

 

4) ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்து, ஆட்சிக்கு வந்த பின்னரும், மலையக மக்களுக்கு ஒரு அங்குல காணி கூட ஒதுக்கீடு செய்ய இந்த அரசாங்கம் தவறியுள்ளது.

 

5) பெருந்தோட்ட தரிசு காணிகளில் குடிசைகளை அமைத்து குடியிருக்க முயற்சித்த, காணியற்ற ஏழை மலையக குடும்பங்கள், வன் தாக்குதல்களுக்கு உள்ளாகின. அதன் போது நான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, தலையிட்டதால், பாராளுமன்ற வளாகத்தில், பொலிஸ் அமைச்சர், பொலிஸ் மா அதிபர் DIGகள், தோட்ட அதிகாரிகள், ஆகியோருடன் கலந்து பேச பட்டது.

 

6) இவ்வாறான சூழலில், அதே பெருந்தோட்ட தரிசு காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய அரசாங்கத்தின் பெருந்தோட்ட அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

 

7) இந்த முரண்பாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில், நாடாளுமன்றத்தில் நேற்று முதல் நாள் நான் எழுப்பியதுடன், ஜனாதிபதி AKD அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தையும் சபையில் சமர்ப்பித்தேன். நவம்பர் 12 ஆம் திகதி ஜனாதிபதியின் கொள்கை உரையில் இதற்கான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

 

8) இதற்கிடையில், பெருந்தோட்ட அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம், ‘அமைச்சரவையின் அனுமதியுடன் தனியார் நிறுவனங்களுக்கு காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என தன்னிச்சையாக கூறியுள்ளார்.

 

இந்த அமைச்சில் இவருக்கு உள்ள அதிகாரம், இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

9) அமைச்சரவை அனுமதி உண்டா? இல்லையா? என நான் கேட்க வில்லை. அதுவல்ல இங்கே பிரச்சினை.

கேள்விகள் இவைதான்.

 

பெருந்தோட்ட தரிசு காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடியும் என்றால், அதே காணிகளை காணியற்ற மலையக மக்களுக்கு ஏன் ஒதுக்கீடு செய்ய ஏன் முடியாது?

 

ஒதுக்கி தருவதாக, சந்திக்கு, சந்தி, பறையடித்து சொன்னீர்கள் தானே?

 

யார், யாரை ஏமாற்றுகிறீர்கள், தோழர்களே?

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026

    நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

    November 6, 2026

    மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

    November 5, 2026
    Editors Picks

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026

    நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

    November 6, 2026

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.