அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை முன்றலில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் முன்னெடுத்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டப் பகுதியில் இன்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
குறித்த போராட்டப் பகுதிக்கு ரஜங்கனயே சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோதே இந்தப் பதற்றம் உருவானதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை, நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.