அநுராதபுரம் – ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் குறித்த வளாகத்தில் இருதரப்பினருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில் குறித்த மூவரையும் பொலிஸார் தமது காவலில் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
