நுவரெலியா மாகஸ்தோட்ட கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது.
நுவரெலியா பொலிஸ் பிரிவின் மாகஸ்தோட்ட பகுதியில் (10.11.2026) அன்று சுற்றுலா விடுதியொன்றில் (கபானா) பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள
சம்பவத்தில் சந்தேகிக்கப்படடும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நுவரெலியா பொலிஸ் குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் (12.11.2026) அன்று இரவு நுவரெலியா பிரதான பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தேரிப்பஹா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணையில், அவர் 10.11.2026 அன்று தேரிப்பஹா பொலிஸ் பிரிவில் காவலில் இருந்து தப்பிச் சென்ற தேடப்படும் நபர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து சந்தேக நபர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
