இன்று இடம்பெற்ற வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில், விசேட கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்கள் அனைவரும் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்!”
சாதாரண சவால்களைத் தாண்டி, விசேட கல்வி அலகின் கீழ் கல்வி கற்கும் அன்பு மாணவச் செல்வங்கள் வலய மட்டப் போட்டிகளில் காட்டிய திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களும் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியை ஈட்டித் தந்த அன்பு மாணவச் செல்வங்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது Malayagam ஊடகக் குழுமத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
