Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

November 22, 2026

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

November 22, 2026

ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

November 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்
Breaking

ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

ThanaBy ThanaNovember 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஆர்.எப்.எம். சுஹெல்

 

நுவரெலியா ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொதுக் கழிப்பறையிலிருந்து கழிவு நீர் கசிவு – பயணிகள், சாரதிகள் கடும் அவதி

 

ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்திலுள்ள பொதுக் கழிப்பறைத் தொகுதியிலிருந்து கழிவு நீர் கசிந்து வருவதால், அங்கு பயணிக்கும் பொதுமக்கள், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

 

ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் அண்மையில் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட இந்தக் கழிப்பறைத் தொகுதியிலிருந்தே கழிவுகள் கசிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், குறித்த கழிப்பறை வசதியைப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

தினமும் பெருமளவிலான பயணிகள் வந்து செல்லும் இந்தப் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையினால், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் மட்டுமன்றி பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டு அண்மையில் புனரமைக்கப்பட்ட கழிப்பறைத் தொகுதியில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மேலும், புனரமைப்புப் பணிகள் உரிய தரநிலைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டனவா என்பது தொடர்பிலும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் பேருந்து நிலைய வளாகத்தின் சுகாதாரச் சூழல் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

 

எனவே, இப்பிரச்சினை தொடர்பில் ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கழிவுகள் கசிவதைத் தடுத்து, கழிப்பறைத் தொகுதியை உரிய சுகாதாரத் தரத்திற்கு மீளமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகளும் பேருந்து ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026

    மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி: கையும் களவுமாக சிக்கிய மூவர்!

    November 22, 2026

    கொட்டகலையில் வளர்ப்பு மற்றும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி!

    November 22, 2026
    Editors Picks

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.