நாட்டில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோர் மத்தியில் எச்.ஐ.வி (HIV) தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவடையும் போது, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் 88 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் மாதவி குணரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது நாட்டில் 708 புதிய எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இலங்கையில் 1987 ஆம் ஆண்டு முதலாவது எச்.ஐ.வி நோயாளர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 8,111 பேர் எச்.ஐ.வி தொற்றாளர்களாகப் பதிவாகியுள்ளதாக டாக்டர் மாதவி குணரத்ன சுட்டிக்காட்டினார்.
