Author: Thana

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருஉமாள்.09.06.2023. மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் இடி மின்னலுடன் இரு நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இடை இடையே பலத்த காற்று வீசுகி மண்றது. இதனால் இப் பகுதியில் பல் வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது உள்ளது இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல் வேறு வீதிகளில் போக்குவரத்து பல மணித்தியாலம் துண்டிக்கப்பட்டது. நீரேந்துப் பகுதியான மவுசாகல, காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான,பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இப் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பெரும் தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கனத்த மழை பெய்து வருவதால் சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, மரே ஓயா, நல்லதண்ணி ஒயா மற்றும் சிறிய ஓடைகளிளும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பண்ணையாளர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் இடி மின்னல் தோன்றும் போது கை களில் இரும்பு உலோக…

Read More

கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை பேரூந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 20 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர்வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை…

Read More

கண்டி, நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களை அண்டியதாக மென்டரின் தோடைச் செய்கை வலயமொன்றை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 2023ஆம் வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி புதிய பயிர் திட்டத்தை அரம்பிப்பதற்காக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது. தற்போது நாட்டில் தோடை உற்பத்திப ல மாவட்டங்களில் இடம்nறுவதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மென்டரின் இன தோடைக்கு பொது மக்களிடம் பாரிய கேள்வி காணப்படுகிறது. இந்தத் தோடை இறக்குமதிக்காக வருடாந்தம் பாரிய அந்நியச் செலாவணி வெளிநாடுக்குச் செல்கின்றது. அறிக்கைகளுக்கு இணங்க 2022இல் தோடை இறக்குமதிக்காக அரசாங்கம் 496 மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதுடன், 2407 மெற்றிக் தொன் தோடம்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஆனால் 2022ஆம் ஆண்டிற்கு முன்னர் இதை விட பாரியளவில் தோடம்பழங்கள் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தவகையில் 7773மொற்றிக் தொன் தோடம்பழங்களின் இறக்கமதிக்காக 2019ஆம் ஆண்டில் 949 மில்லியன்…

Read More

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஜூன் 10, 2023 முதல் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

டி.சந்ரு நுவரெலியாவிலிருந்து – நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து நுவரெலியா சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி செல்லும் வழியிலேயே குறித்த வேன் பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதி நேற்றிரவு புதன்கிழமை 11 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற போது குறித்த வேனில் 8 பேர் பயணித்துள்ள போதிலும் ஒருவருக்கு மாத்திரம் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் வேறொரு வேன் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேன் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இன்று அமரர் ஆசிரியர் ஜீவராஜன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளாகும். பலரது வாழ்வில் ஆசிரியர் ஜீவராஜன் அவர்களின் தாக்கம் அளவிட முடியாதது. இவர் கற்றுக்கொடுத்தவைகள் இன்றும் தொடர்ந்து அவர்களை வழிநடத்துகின்றது என்றால் மிகையாகாது. பல பொறியாளர்களையும், கணித பாட ஆசிரியர்களையும் இச்சமூகத்திற்கு தந்த பெருமை இவரையே சாரும். ஆசிரியரின் நினைவு நாள் சந்திப்பு நிகழ்வுகள் ZOOM தொழில்நுட்பத்தினூடாக 2023/06/10 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இடம்பெறும்.

Read More

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு, பிரதான நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. கொழும்பு, இராஜகிரிய தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியினர் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதை தடுக்கும் வகையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (01) பிரிவின்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கட்சியின் உறுப்பினர்களான விஜித ஹேரத், லால்காந்த, டில்வின் சில்வா, சுனில் ஹந்துனெத்தி மற்றும் வசந்த சமரசிங்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை வீதி, நாவல வீதி மற்றும் தேர்தல் காரியாலயத்தின் அணுகு வீதிகள் உள்ளிட்ட பல வீதிகளில் போராட்டம் நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியினர் இன்று மாலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு…

Read More

கால்நடைகளிடையே பரவி வரும் தோல் கழலை நோய், மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பரவியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மேல் மாகாணத்திலுள்ள கால்நடைகளிடையே தோல் கழலை நோய் தொடர்ந்தும் பரவி வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். எனினும், இதுவொரு பெருந்தொற்று நிலைமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இந்தியாவின் லக்னோ நீதிமன்ற வளாகத்திற்குள் புதன்கிழமை (7) துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. லக்னோ நீதிமன்ற கட்டடத்துக்கு வெளியே இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் சஞ்சீவ் ஜீவா என்ற பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதேநேரம், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் ஆறு வயதுடைய சிறுமி ஒருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சட்டத்தரணி போல் உடை அணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் வந்து சஞ்சீவ் ஜீவா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்க்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும் துப்பாக்கி பிரயோகம் முன்னெடுத்த நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More