Author: Thana
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்வதுடன், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்…
வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டு நாட்கள் ஜனாதிபதிக்கும் அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இதன்போது காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எனினும் அவற்றில் முன்னேற்றங்கள் இல்லாத சூழ்நிலையில், இன்று ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் புலனாய்வாளர்களுடன் இடம்பெற்ற சம்பவம் குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்தே அவர் செய்யப்பட்டார். இந்நிலையில், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (07) மாலை 5.30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் சற்றுமுன்னர் அனுமதித்தது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம் அவரது கட்சி ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்களால் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
கண்டி – கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக காவல்தறையினர் தெரிவித்தனர்.தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் வைத்து, இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்பினர் இன்று (7) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என கோட்டை, கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு வீதி காவல் நிலையங்கள் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித், அந்த அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ மற்றும் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி…
நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.புங்குடுதீவு, குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற குறித்த இழுவை படகு நெடுந்தீவின் இறங்குதுறைக்கு அருகில் கடலில் ஏற்பட்ட அலையின் காரணமாக படகின் அடிப்பகுதி தரைப்பகுதியில் மோதியுள்ளது. இதனால் படகின் அடிப்பகுதியில் துளை உண்டாக, உள்ளே தண்ணீர் கசிவு ஏற்பட்டு அது ஆபத்தில் உள்ளதாக வடக்கு கடற்படை கட்டளை பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பிற்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், கடலோர ரோந்து படகுகள் மற்றும் இலங்கை கடற்படையின் இரு சிறிய படகுகளை பயன்படுத்தி விபத்தில் சிக்கிய படகையும் அதில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டனர்.மேலும், கடற்படையின் இந்த உடனடி நடவடிக்கையின் காரணமாக, பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை தவிர்க்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டராடோ தோட்டத்தில் அமைந்துள்ள சிறி கன்னிமாரியம்மன் பத்தினி ஆலயமும் லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சிறி முத்துமாரி அம்மன் ஆலயமும் திருடர்களால் உடைக்கப்பட்டு சுமார் 370000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் ஒரு ஆலயத்திலும் 74000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் கொள்ளையிடப் பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறி கன்னிமாரியம்மன் பத்தினி ஆலயத்தில் சாமி சிலைக்கு அணியப்பட்டிருந்த தாலி 3 தாலி பொட்டு 3 கண்மலர்கள் 2 மற்றும் ஆலயத்தில் உள்ள உண்டியல் 1 DVD player 1 எம்ப் 1 சுமார் 370000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தாலி 1,தாலி பொட்டு 1, உண்டியல் 1 ஆகியன ஆலயம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக லுணுகலை…
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியை இலங்கையும் வென்றிருந்த நிலையில், ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என தொடரை இலங்கை கைப்பற்றியது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ஹஷ்மதுல்லாஹ் ஷாகிடி, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், லஹிரு குமார (2), துஷ்மந்த சமீர (4), வனிடு ஹஸரங்க (3), மகேஷ் தீக்ஷனவிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 22.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களையே பெற்றது. பதிலுக்கு 117 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்கவின் 51 (34), திமுத் கருணாரட்ணவின் 56 (45) ஓட்டங்களோடு 16 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது. இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் சமீர தெரிவானார்.
நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்வூட்- பொகவந்தலாவை பிரதான வீதியில், வெஞ்சர் தேயிலைத்தொழிற்சாலைக்கு அண்மையிலேயே செவ்வாய்க்கிழமை (06) இரவு 11 மணியளவில் பள்ளத்தில் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் சிலர் ஈடுபட்டுகொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்ஜோன்டிலரி தோட்டத்தில் இருந்து நியூவெளியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பொலிஸாரை அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.