Author: Thana
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை – மட்டுக்க்கலை பிரதேசத்திற்கிடையில் பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்துள்ளதால் 1 மணித்தியாலமாக தலவாக்கலை – நுவரெலியா வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தில் போலி எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம்.
அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் கொஸ்லந்த, ஹல்துமுல்ல ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை நகரை அண்மித்த பகுதிகளில் நடாத்தப்பட்டது. பண்டாரவளை மரக்கறி மொத்த சந்தையின் மூன்று வியாபாரிகள் பயன்படுத்திய சுமார் 225 கடைகளின் எடை மற்றும் அளவிடும் கருவிகள் சோதனையிடப்பட்டு மூன்று போலி தராசுகள் கைப்பற்றப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த பன்னிரெண்டு மாதங்களில், சீல் வைக்க தவறிய 18 வியாபாரிகளுக்கு எச்சரிக்கப்பட்டு, தராசுகளை சீல் வைக்க அவகாசம் அளிக்கப்பட்டது. பதுளை மாவட்ட சுனில் அபேகோனின் செயளாலர் ஆலோசனையின் பேரில் இந்த ஆய்வுகளை உதவி அளவீட்டு அலகு தரநிலை சேவை அத்தியட்சகர் துலித் அசோக, அளவீட்டு சேவை பரிசோதகர்கள் எம்.ஐ.பிரேசர, தரிந்து அபேசிறிவர்தன மற்றும் அளவீட்டு நியம உதவியாளர் வசந்தகுமார, இஷங்க அனுருத்த ஆகியோர் மேற்கொண்டனர்.
அநுராதபுரம், இராஜாங்கனை பகுதியில் கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலியானதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 67 வயதான வயோதிபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற ஐந்து வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதேவேளை, காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற – சிறுமியின் தந்தை (வயது 35), தாய் (வயது 32) ஆகியோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேன் சாரதியான 28 வயது இளைஞரும் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத் தராதரப் சாதாரணத்தரப் பரீட்சையின் மூன்று பரீட்சை நிலையங்களில் மூன்று மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்தி ஒருவர் கணித வினாத்தாளை ஆசிரியை ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் அனுப்பி பதில்களை வட்ஸ்அப் ஊடாக பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறுகிறார். மேலும், ஹெனேகம மகா வித்தியாலயத்தின் பரீட்சை நிலையத்தில் இருவர் கையடக்கத் தொலைபேசி மூலம் கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு தனித்தனியாக அனுப்பி விடைகளைப் பெற்ற சம்பவத்தை பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். சீதுவ த்விஸ்மர வித்தியாலய பரீட்சை நிலையத்தில் ஐந்து பரீட்சார்த்திகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு அனுப்பி விடைகளைப் பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்…
இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் சிறுபான்மை இன நீதிபதியாக இலங்கை வம்சாவளிப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 34 வயதான ஆயிஷா ஸ்மார்ட், என்பவரே இங்கிலாந்தின் வடகிழக்கில் இந்த உயர்பதவிக்கு தெரிவாகியுள்ளார். அதேபோன்று வெள்ளையர் அல்லாத இளைய நீதிபதி என்ற அடிப்படையில் மூன்றாமவராகவும் அவர் கருதப்படுகிறார். இங்கிலாந்தில் ஒரு நீதிபதி ஆவதற்கான செயல்முறை சிக்கலானது, இரண்டு தேர்வுகள், பயிற்சி மற்றும் ஒரு நேர்காணல் ஆகியவற்றை உள்ளடக்கியது. அத்துடன் இறுதி ஒப்புதல் மன்னரால் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்தச் செயல்முறைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இலக்குடன் செயற்பட்டு அதில் வெற்றி பெற்றதாக ஆயிஸா ஸ்மார்ட் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீரை மாசுபடுத்தியமைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்ட DPL நிறுவனத்திற்கும் அதன் தொழிற்சங்கத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உற்பத்தி செயல்முறையின் காரணமாக நீர் ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து, 2013ஆம் ஆண்டில், ரதுபஸ்வல பகுதியில் இருந்து குறித்த நிறுவனத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய உள்ளூர் மக்களுக்கு, ராஜபக்ச அரசாங்கம் தோட்டாக்களால் பதிலளித்த நிலையில், மூன்று எதிர்ப்பாளர்கள் உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமடைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்றான ”வெனிக்ரோஸ்” என்ற பெயரில் இறப்பர் கையுறைகளை உற்பத்தி செய்த இந்த நிறுவனம், பின்னர் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் `DPL Gloves’ (DPL PREMIER GLOVES LIMITED) என்ற பெயரில் நிறுவப்பட்டது. ஒப்பந்த இணக்கம் “2022ஆம் ஆண்டுக்கான சம்பள அதிகரிப்பு ரூபா 7000. (இதற்கமைய ஓகஸ்ட் 2022 முதல் நிலுவைத் தொகை ஒரே தடவையில் வழங்கப்படும்) , 2023ஆம்…
2021-23 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை (7) புதன்கிழமை லண்டனில் அமைந்துள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இப் போட்டியானது எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இடம்பெறும். 2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 19 போட்டிகளில் 152 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 18 போட்டிகளில் 127 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்கா 15 ஆட்டங்களில் விளையாடி சரியாக 100 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்ததால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. இந்தியா தொடர்ந்து இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பது விசேட அம்சமாகும். அவர்கள் 2019-2021 WTC டெஸ்ட் சமாபியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தனர், ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர். 2021 இல் சவுத்தாம்ப்டனில் நடந்த இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலமையிலான நியூசிலாந்தை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.…
கட்டுநாயக்கவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வேனும் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் கித்துல்உத்து சிங்கபுர பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் கனரக வாகனம் கவிழ்ந்ததுடன் வேனும் பலத்த சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் முதலில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வேனில் பயணம் செய்த தம்பதியினரே உயிரிழந்ததுடன் வேனில் பயணம் செய்த மற்றொருவரும் கனரக வாகன சாரதியும் படுகாயமடைந்தனர். கிண்ணியாவைச் சேர்ந்த முஸ்தபா அலாவுதீன் மற்றும் சுஹைலா உம்மா (45) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
லங்கா பிரீமியர் லீக் 2023 இன் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் என்ற விளையாட்டின் ஆளும் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் விதிமுறைகளின்படி போட்டிகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதே தொழில்நுட்பக் குழுவின் பணியாகும். தொழில்நுட்பக் குழு பின்வரும் உறுப்பினர்களை கொண்டுள்ளது: பந்துல திஸாநாயக்க தலைவர் ஷேன் பெர்னாண்டோ உறுப்பினர் தரங்கா பரணவிதான உறுப்பினர் டைரன் விஜேவர்தன உறுப்பினர்/செயலாளர் லங்கா பிரீமியர் லீக் 2023 இன் நான்காவது பதிப்பு ஜூலை 30, 2023 இல் தொடங்கவுள்ளது.