Author: Thana

பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்குமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தோட்டத்திற்கு சொந்தமான வனப்பகுதியில் புதையல் தோண்டிய 60 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்பிரிங்வெளி ப்ளொக் 5 நல்லமல பகுதியை சேர்ந்த 60 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று புதன்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராமு தனராஜா

Read More

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பால் இன்று காலை 5 அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, புத்தளம் பாதையூடான ஒரு ரயில் சேவையும், களனிவெளி பாதையூடான 2 ரயில் சேவைகளும், குருணாகல் மற்றும் மொரட்டுவையிலிருந்து கொழும்பு, கோட்டை வரை செல்லும் 2 ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொழும்பு – பதுளைக்கு இடையிலான உடரட்ட மெனிக்கே ரயில் சேவையும் இன்றைய தினம் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நேற்று (9) நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் பதவி உயர்வினை கண்டித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

தெஹிவளை, வைத்தியசாலை வீதி பகுதியில் இருவர் மீது சிலர் தாக்குதல் நடத்தி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றையவரை படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் லொறி, வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் தில்ஷான் ரங்க குமார என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை…

Read More

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் கிளிநொச்சி முழங்காவில் தேசிய பாடசாலையைச் சேர்ந்த சுமன் கீரன் தங்கப் பதக்கம் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் சுரேந்திரகுமார் மிதுன்ராஜ் 24 மணித்தியாலங்களுக்குள் 3 தங்கப் பதக்கதையும் கண்டி திகன ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி வீராங்கனை என். அபிநயா ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்களையும் வென்று சாதித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (09) காலை நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 35 நிமிடங்கள், 44.37 செக்கன்களில் நிறைவு செய்து  சுமன் கீரன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் அவர் வென்றெடுத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுமன் கீரன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில்…

Read More

மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கும் இளைஞருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும், சிறுமி அந்த உறவை முறித்துக் கொண்டதால் குறித்த இளைஞர் தொடர்ந்தும் அவரை மிரட்டி வந்துள்ளார். அதன் காரணமாக சிறுமியை மொனராகலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் குறித்த இளைஞர், சிறுமி தங்கவைக்கப்பட்டிருந்த உறவினரின் வீட்டுக்குச் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதுவரை சிறுமி தொடர்பில் எவ்வித தகவலும் தெரியவரவில்லை எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரியை புகையிரத சேவையில் நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(9) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று இரவு 12 மணி முதல், அனைத்து சேவைகளில் இருந்தும் விலக அனைத்து புகையிரத நிலைய அதிபர்களும் தீர்மானித்துள்ளனர். புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் (வணிக) பதவியை நியமிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரி ரயில்வே அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக அறிவித்த போதும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் சங்கத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்ததாகவும் கசுன் சாமர தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் “அஸ்வெசும”(ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 4 இலட்சம் பேருக்கான 2500  ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. பாதிக்கப்படக் கூடிய 4 இலட்சம் பேருக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 8 இலட்சம் பேருக்கான 8500 ரூபாய் கொடுப்பனவும் மிக…

Read More

மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரபர்வத்தை மெதவெலகம பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை ஆக்கரத்தனை விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்குறிப்பிட்ட சந்தேக சந்தேக நபரின் இருப்பிடத்தை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வெடிமருந்து நிரப்பி சுடும் துப்பாக்கி ஒன்று விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் விஷேட அதிரடிப் படையினர் மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நாளைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடுல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். ராமு தனராஜா

Read More

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டார். இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்தது.

Read More