Author: Thana
கண்டி ரஜவல இந்து தேசிய கல்லூரியின் மாணவன் ஹரிஹரன் அபினேஷ் 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாமிடம்
கொழும்பில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் மெய்வல்லுனர் போட்டிகளில் இன்று இடம்பெற்ற 3000 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஹரிஹரன் அபினேஷ் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார். ராககலை புரூக் சைட்டை பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்படமாக கொண்ட ஹரிஹரன் நளாயினி தம்பதியினரின் புதல்வர் ஆவர். இவர் கண்டி ரஜவல இந்து தேசிய கால்லூரியின் சாதாரண தர மாணவன் என்பது குறிபிடத்தக்கது.
சட்டவிரோதமான முறையில் 15 கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (7) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 6 கிலோ 996 கிராம் தங்கத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவற்றில் 4 கிலோ 942 கிராம் தங்க பிஸ்கட்களும், 2 கிலோ 942 கிராம் நகைகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மருதானையைச் சேர்ந்த 43 வயதான இந்த நபர் அடிக்கடி விமானப் பயணங்களை மேற்கொள்ளும் வர்த்தகரொருவர் எனவும் தெரியவந்துள்ளது. விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் முடித்துக் கொண்டு, சுங்க வளாகத்தில் இருந்து வெளியே வந்த அவர், விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது கைது செய்யப்பட்டதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு இடையில் அதிகரித்துவரும் டெங்கு, இன்ப்ளூவன்ஸா மற்றும் வாந்திபேதி – விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா
இந்த நாட்களில் குழந்தைகளுக்கு இடையில் டெங்கு, இன்ப்ளூவன்ஸா மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன என்று குழந்தைகள் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக குழந்தைகளுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின், இரத்தப் பரிசோதனை (Full Blood Count) ஒன்றை மேற்கொள்ளுமாறும், விசேடமாக டெங்கு அதிகரித்துள்ள பிரதேசங்களில் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமது வீடுகள் மற்றும் பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் காணப்படின், அவ்விடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், நாம் நினைத்துக்கூடப்பார்க்காத இடங்களில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதனால், அது குறித்தும் அவதானமாக இருக்குமாறு விசேட வைத்திய நிபுணர் பொது மக்களை கேட:க்கொண்டுள்ளார். இதேவேளை, கடந்த சில நாட்களாக இன்ப்ளூவன்ஸா தொற்றாளர்கள்; மிக வேகமாகப் பரவி வருகின்றனர்.…
நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்கேற்புடன் இன்று (08.05.2023) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், நகர அபிவிருத்தி அதிகாரைிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதன்போது நுவரெலியா நகரை சிறப்பானதொரு சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கருத்தகளும், ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இவை தொடர்பில் ஆராய்ந்து, உரிய ஆய்வுகளின் பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென குழுவொன்றும் அமைக்கப்பட்டது. சுமார்…
கோதுமை மாவிற்காக சேர்க்கப்பட்டுள்ள மூன்று ரூபா எனும் சுங்க சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கோதுமை மாவின் விலை எக்காரணத்திற்காகவும் மாற்றம் செய்யப்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். அவிஸ்ஸாவெல பிரதேசத்தில் (07) நேற்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் குறிப்பிட்ட அரிசிக்கு பிரதான மாற்றீடான கோதுமை மாவிற்காக வழங்கப்பட்ட கிலோவிற்கு மூன்று ரூபா சுங்க சலுகை மீண்டும் நீக்கப்பட்டமை ஊடாக, விவசாயிகளின் வாழ்வாதார மட்டத்தை 90வீதம் பாதுகாப்பதற்காக கோதுமை மாவின் விலை முகாமைத்துவம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடந்த 2023.04.22 அன்று சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் SOS, CSI, மற்றும் பென்தர் ஆகிய சிறுவர் இல்லங்களின் ஏற்பாட்டில், புதுவருட கொண்டாட்ட விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட பொலிஸ் பிரிவின் வேண்டுகோளுக்கிணங்க, லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனமானது, அச்சிறுவர்களுக்கான 45 பாடசாலை தோள் பைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி சதீஷ் கண்ணா,நுவரெலியா மாவட்ட பொலிஸ் அதிகாரி, சிறுவர்கள், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்படுவதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார். வைத்தியசாலை செய்திகள் ஊடாக பரவும் தகவல்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்; “.. கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சைகளின் பின்னர் நோயாளர்களின் கண்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் விஷம் கலந்தமையால் கண் பார்வை முற்றாக இழந்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் இருப்பது முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. கிளினிக்குகள் முடிந்து வீடுகளுக்குச் சென்ற நோயாளிகள் பார்வையை முழுமையாக இழந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் படிப்படியாக குணமடைந்து வருகின்றனர்..” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், பொதுமக்களும் பயன்பெறுவார்கள் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பரீட்சையின் 8 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இன்று முதல் ஆரம்பம்.
உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய இசை மற்றும் இந்தி பாடங்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 08 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று(08) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார். சம்பந்தப்பட்ட விடைத்தாள்கள் வெளி மாகாணங்களில் உள்ள 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள்களின் மதிப்பீடு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் கண்காணிப்புப் பணியில் கடந்த வியாழக்கிழமை முதல் பங்கேற்கத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.