Author: Thana

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் பசறை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் பொலிஸ்துணைப்படையில் கடமையாற்றும் படல்கும்பர பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் படல்கும்பரவில் இருந்து பதுளைக்கு பணியின் நிமித்தம் சென்று, மீண்டும் படல்கும்பர நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்து போது, பதுளை-பசறை 8 ஆம் கட்டை பகுதியில் மாலை 4 மணியளவில் தேநீர் அருந்துவதற்காக முச்சக்கரவண்டியை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன்பின் தேநீர் அருந்திவிட்டு வந்து பார்த்தவேளை, முச்சக்கரவண்டி காணாமல் போயிருந்ததை அவதானித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகியிருந்த காணொளியை பார்வையிடுகையில், இருவர் வந்து குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திக்கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது. மேலும் குறித்த முச்சக்கரவண்டி பதுளை-பசறை 10 கட்டை சந்தி யூடாக நமுனுகெல சென்று, அதன்பின் ஹிங்குருகடுவ நோக்கி பயணித்தமை தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பசறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, ஹிங்குருகடுவ பொலிஸாரின் உதவியுடன் பசறை பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும்…

Read More

களுத்துறையில் மற்றுமொரு பயங்கரம் – 16 மாணவிகள் துஷ்பிரயோகம். களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவங்கள் தொடர்பில் களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று மாலை வரை பல முறைப்பாடுகள் கிடைத்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வகுப்புக்கு வரும் மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி லகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவங்களை தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்தும் வைத்துள்ளார். மேலும், சூம் தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் நடத்தி பெற்றோர் இல்லாத நேரத்தில் ஆடைகளை கழற்றுமாறு அறிவுறுத்தி, அந்த காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தனது மடிக்கணினியில் அனைத்து பாலியல் வீடியோக்களையும் சேமித்து வைத்திருந்ததை அவரது மனைவி கண்டறிந்து, மாணவிகளின் பெற்றோருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாக தொடங்கியது.…

Read More

நவீன உலகத்திற்கு ஏற்ற முற்போக்கான தொழிலாளர் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்காக பொது மக்களின் கருத்துகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார். இதற்கமைவாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ப்படவுள்ளன, இந்த நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்துவதற்கான செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்கு நேற்று (10) தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்கள உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 0114 22 31 59 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவதன் மூலமோ அல்லது labourreforms@labourmin.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ, தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதற்கான உங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும். தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் இதில் பங்குகொள்ள முடியும். இதேவேளை அமர்வில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. கனிஷ்க…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள நிதிநிதியின் முதலாவது மீளாய்வுக்கு இணையாக இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள் ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீ நிவாசன் உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளனர். இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

Read More

கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவகம் மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுக்கூறும் வகையில், இம்மக்களது வரலாறு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கிய பங்களிப்பினை வெளிக்காட்டும் வகையில் எதிர்வரும் 2023 மே மாதம் 19, 20, 21 ஆம் திகதிகளில் நுவரெலியா சினிசிட்டா மண்டபம் மற்றும் ரேஸ்கோஸ் மைதானத்தில் கண்காட்சி மற்றும் ஆய்வரங்கு உட்பட பல விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் மலையக மக்களின் வாழ்வியல் வரலாற்றையும் அரசியல், பொருளாதார விடயங்களையும் வெளிக்கொண்டு வரும்வகையில் ஆய்வரங்கு, தோட்டத் தொழிலாளர்களின் அருங்காட்சியக கண்காட்சி, மாவட்ட பிரதேச செயலகத்துடன் இணைந்து அடிப்படை ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை மற்றும் பிரதேச சபையுடன் இணைந்து அதன் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் உட்பட ஏவுயுஃNயுஐவுயு உடன் இணைந்து இளைஞர்-யுவதிகளுக்கான தொழில் பயிற்சி வழிகாட்டல் செயலமர்வுகள் நடாத்தப்பட உள்ளது. அத்துடன் பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்காக முக்கிய தொணிப்பொருளில் கையொப்பம் திரட்டப்பட…

Read More

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பால் இன்று (10) மாலை 11 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட அலுவலக ரயில்கள் மற்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (9) நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

Read More

தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (11) முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் நடவடிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு தொடங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய கட்டத்திற்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இரண்டு கட்டங்களாக அமுல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் 15,000 வீடுகளுக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

இரண்டரை வயது குழந்தையொன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழ்.இளவாலை வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது. நேற்று(09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில் தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர். யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையின் சடலம், உறவினர்களிடம் இன்று( 10) கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More