Author: Thana

களுத்துறை பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய களுத்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள ஐந்து மாடி ஹோட்டல் தர நிர்ணயத்திற்கு  அமைய கட்டப்பட்டதா என நகர அபிவிருத்தி அதிகாரசபை விசாரணை. பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய களுத்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள ஐந்து மாடி ஹோட்டல் தர நிர்ணயத்திற்கு அமைய  கட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத்  (11) நகர அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தின் தலைவர்களுக்கு வழங்கினார். இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் அதனை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு அனுப்பி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என நம்புவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கூறினார். உரிய தரமற்ற மற்றும் அனுமதியின்றி உரிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டால் கட்டிட உரிமையாளருக்கு எதிராக சட்ட…

Read More

டி சந்ரு திவாகர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது . இதன் காரணமாக ஏப்ரல் மாதம் 05 சத்திரசிகிச்சைக்குள்ளான 32 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன . பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கும் , 25 பேர் கண்டி வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தவிடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மஹேந்திர செனவிரட்னவிடம் வினவிய போது இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த சத்திரசிகிச்சையின் பின் பாவிக்கப்பட்ட தேசிய வைத்தியசாலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ப்ரெட்னிசோலோன் மருந்தை பயன்படுத்தியமையால் ஏற்பட்ட சிக்கல் காரணமாகும் , அந்த மருந்தில் கிருமிநாசினி இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது இதனால் தற்போது கண் அறுவை சிகிச்சையை…

Read More

ம.மா.ஹவ.என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் பாடசாலையின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தினை இன்று படைத்துள்ளது. மாணவர்களின் காலத்துக்கேற்ற தேவையறிந்து நாடாத்திய ” ஒழுக்க தலைமைத்துவ தொழில்வாய்ப்பு வழிகாட்டல் செயலமர்வு” மிகவும் காத்திராமான திட்டமிடலாகவும் அமைந்திருந்தது. கல்லூரியின் அதிபர் திரு இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் பழையமாணவர் சங்க செயலாளர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் 300 மாணவர்கள் பங்குகொண்டனர். இரு அமர்வுகளாக இடம்பெற்ற செயலமர்வில் முதலாவது அமர்வில் மாணவர்களின் ஒழுக்கமும் ஆளுமையும் என்ற விடயம் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இடம்பெற்றது. அதனைதொடர்ந்து மாணவர்களுக்கான தலைமைத்துவம் என்ற தொனிப்பொருளில் மாணவர்தலைவர்கள் உள்ளடங்கலாக 100ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். இவ்செயலமர்வு அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. வளவாளராக Mr.Sribavan Balasingam M.A (Dev.Stu.),Dip.in CG., B.A(Hons). Career Counselling Consultant & Trainer, Master Trainer of Soft Skill.கலந்து கொண்டு மிகவும் ஆரோக்கியமானதொரு பணியையாற்றியிருந்தார். இந்நிகழ்வு முழுமையான…

Read More

கடற்படை வரலாற்றில் முதன்முறையாக பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக, இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதல் தொகுதி பெண் கடற்படையினர் 2023 மே 11 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கடல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கஜபாகு கப்பலுடன் கப்பல்கள் இணைக்கப்பட்டன. இதுவரை ஆண் மாலுமிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கப்பல்கள் மற்றும் கப்பல்களின் கடமைகளுக்கான வாய்ப்பை பெண் மாலுமிகளுக்கு வழங்கவேண்டும் என்ற கடற்படையின் முடிவின்படி, ஒக்டோபர் 2022 இல் இருந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பெண் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கையாளுதலில் அடிப்படை பாடநெறியை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. கடலோர ரோந்து கப்பல்கள் விநியோகம் செய்யப்பட்டது. அங்கு, அடிப்படை வழிசெலுத்தல், கடற்படை, தீயணைப்பு, செய்தி பரிமாற்றம், போர் முதலுதவி மற்றும் கப்பல்கள் மற்றும் கப்பல்களின் மின்சார மற்றும் மின்னணு அமைப்பு பற்றிய தத்துவார்த்த மற்றும் நடைமுறை…

Read More

பண்டாரவளை, கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தியலும பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் ‘தற்காலிக கூடாரம்’ அமைத்து தங்கியிருந்த இளைஞரும், யுவதியும் இன்று காலை 5.45 மணியளவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நிலையில், யுவதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். படுகாயமடைந்த இளைஞன் கொஸ்லாந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தயத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குருணாகல் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரும், மாத்தறை பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதியும் சுற்றுலா வந்த நிலையில், நீர்வீழ்ச்சிப் பகுதியில் கூடாரம் அமைத்து நேற்றிரவு தங்கியுள்ளனர். இரவுவேளையிலேயே அவர்களை காட்டு யானை தாக்கியுள்ளது. உயிரிழந்த யுவதியின் சடலம் , நீதவான் பரிசோதனைக்காக சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இவர்கள் காதல் ஜோடியா அல்லது தம்பதியினரா என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ராமு தனராஜா

Read More

வீட்டிலிருந்து புறப்பட்டு 100 மீற்றர் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்த யுவதியை, கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். அந்த யுவதியை, கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய, மகாவலி கங்கை, இவர உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் கிராமத்தவர்கள், கம்பளை பொலிஸார் இணைந்து தேடிவருகின்றனர். எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முனவுவரமா என்ற ​யுவதியே காணாமல் போயுள்ளார். அந்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசியில் பணியாற்றுக்கின்றார் என அந்த யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார். வீட்டிலிருந்து பயணவைத்து நடந்துச் செல்லும் காட்சி, எல்பிட்டிய பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் இறுதியாக பதிவாகியுள்ளது. அவ்விடத்துக்கு அப்பால் இருக்கும் எந்தவொரு கமெராக்களிலும் அந்தக் காட்சி பதிவாகவில்லை. அவரை கண்டவர்கள் யாரும் இல்லையெனவும் சகோதரன் தெரிவித்துள்ளார். பணியாற்றும் இடத்துக்குச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வீட்டிலிருந்து புறப்பட்டு, பஸ்ஸூக்காக மட்டும் தன்னிடம் 100 ரூபாயை வாங்கிச் சென்றார் என்றும், தன்னுடனும் வேறு எவருடனும் எவ்விதமான மனஸ்தாபங்களும் இல்லையென்றும்…

Read More

கண்டியில் உயர்தர பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் பாடசாலை கட்டிடத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி இப்பாடசாலையில் 10 ம் ஆண்டில் கல்வி கற்பவர் எனவும் மாணவி 15 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி ஒரு மாணவர் தலைவி எனவும் கட்டுகஸ்தோட்டை களுகமுகவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் பற்றி கட்டுகஸ்தோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். மடுல்கலை நிருபர்

Read More

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் இன்று கைதுசெய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்ததுடன் நேற்றயதினம் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது. அதில் மழையினையும் பொருட்படுத்தாமல் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை விசாரணை ஒன்றிற்காக ஆலயநிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிசாரால் நேற்றயதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தின் பூசாரிமற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவர்களை கைதுசெய்தனர். . கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் சில பகுதிகளில் பலத்த பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளதாகவும், எச்சரிக்கை நோட்டீஸ்களும் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். ஆனால், அதன் பிறகுதான் முன்னாள் பிரதமர் நிரபராதி என்று நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

Read More

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More