Author: Thana
வி.தீபன்ராஜ் நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டி யிலிருந்து நுவரெலியாவிற் பசலை (கோழி உரங்களை)ஏற்றி பயணித்த லொறியொன்று பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த தேயிலை தோட்டத்தில் விழுந்துள்ளது விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர் எனினும் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த லொறியில் ஏற்பட்ட தொழினுட்ப கோராறு காரணமாகவே வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது என மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறும் நிலையில், பாடசாலைகளுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த இரு சிறுவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குறித்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர், மன்னார் பொலிஸார், இரானுவத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அதிகளவான பெற்றோர்களும் பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வருவதையும் மாணவர்கள் குழுக்களாக பயணிப்பதையும் வீதிகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் குறித்த கடத்தல் முயற்சி தொடர்பில் திங்கட்கிழமை மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த கடத்தல் கும்பல் மற்றும்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மற்றும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது. அதிகாரப் பகிர்வு, வடமாகாண அபிவிருத்தி போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட உள்ளன. எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிப்பதில் பயனில்லை, எனவே அந்த உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டால் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என டெலோ மற்றும் புளொட் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அரசு வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும் சிகிச்சை அறை வசதியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும் சிகிச்சை அறைகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்கராவ பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளனதில் முச்சக்கர வண்டி சாரதி இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூவரும் பொரளாந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் கொழும்பில் இருந்து பொரலந்த பகுதியில் அமைந்துள்ள தமது வீடுக்கு திரும்பும் போதே இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து ஹப்புத்தளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் ராமு தனராஜா
களுத்துறையில் அண்மையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சற்று முன்னர் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதுடைய சந்தேக நபர், களுத்துறையில் உள்ள ஹோட்டல் அறைக்கு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியை அழைத்துச் சென்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை இசுரு உயன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் முன்னதாக மூவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிராமப்புறங்களில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இரத்தினபுரி மாவட்டத்திற்கு 23 பஸ்கள்…
நாட்டிலுள்ள கிராமப்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபையினால் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தும் திட்டத்திற்கு அமைய இரத்தினபுரி மாவட்டத்திற்கு 23 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களை இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போவிற்கு கையளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (07) நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. 75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு கிராமப்புற சாலைகளில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபர் சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் சேவையின் தரம் III க்கான போட்டிப் பரீட்சைகள் 2019.02.10 ஆம் திகதி அன்று நடைபெற்றது. அந்த வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் இந்த நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான மேலதிக தகவல்களை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
320 P வெளிஓயா கிராம அலுவலர் பிரிவில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் மேம்பாட்டு கலாச்சார கொண்டாட்ட நிகழ்வு வெளிஓயா கீழ்பிரிவு சூப்பர் ஸ்டார் மைதானத்தில் 2023.05.07 அன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த மூன்று வருடங்களில் நாட்டை உலுக்கிய கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் சிறுவர்கள் தொடர்ச்சியாக உள பாதிப்புகளை வெளிப்படுத்துவதை கண்ணுற்றதன் விளைவாக கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு வர்ல்ட் விஷன் நிறுவனத்தின் இணை அனுசரணையுடன் முழுக்க முழுக்க சிறுவர்களின் மகிழ்ச்சியை இலக்காக வைத்து இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , வர்ல்ட் விஷன் நிறுவன பிராந்திய முகாமையாளர் பிரான்சிஸ் , CDPO நிறுவன கள உத்தியோகத்தர் திருமதி . காருண்யா ஆக்ரோயா பாதிரியார் ஜெபசெல்வன் ஆகியோர் சிறப்பு விருதினர்களாக கலந்து கொண்டிருந்த அதேவேளையில் வெளிஓயா கிராம அலுவலர் திருமதி .வீணாதேவி தலைமையில் VCDC…
பிரித்தானிய காலனித்துவத்தில் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் இலங்கையில் பல வாழ்வியல் அனுபவங்களோடு தங்கள் இருப்பை இருநூறு வருடகாலம் நிலைநிறுத்தியுள்ள நிலையில் (1823 – 2023) அவ் அனுபவங்களை மீட்டிப்பார்க்கின்ற தருணமாக இக்காலகட்டம் விளங்குகிறது. மலையக சமூகத்தின் வரவு, உழைப்பு, வாழ்வு அனுபவங்களை மீட்டிப்பார்க்கும் வகையிலான தொடர் ஆய்வரங்க செயற்பாட்டை நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் இணைய வழியில் எதிர்வரும் மே மாதம் தொடக்கம் தொடர்ந்து ஐம்பது மாதங்கள் நடாத்த திட்டமிட்டுள்ளோம். சமூக, பொருளாதார, கலை, இலக்கிய, கல்வி, விளையாட்டுத்துறை, அரசியல் அனுபவங்களை ஆய்வு ரீதியிலான அனுகுமுறைகளுடனான கலந்துரையாடலுக்கு உட்படுத்துவதோடு அதனை முறையாக ஆவணப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டமைத்துள்ளது. ஒரு விடயம் தொடர்பாக மாதமொன்றில் இரண்டு ஆய்வரங்குகள் நிபுணத்துவம் வாய்ந்த ஆளுமைகளின் தலைமையில் இடம்பெறும். புலமை வாய்ந்த ஆய்வாளர்களையும், இத்துறையில் வளர முனையும் ஈடுபாட்டாளர்களையும் இணைத்துக்கொண்ட வகையில் ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்படும். மலையகத்தோடு தொடர்புபட்ட சகலத்துறையினரும் இக் கலந்துரையாடலில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இதன்…