Author: Thana
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியு பெட்டிகல பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கினிகத்ஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நான்கு முச்சக்கர வண்டிகளை கினிகத்ஹேன பிரதேசத்தில் திருடிய குற்றச்சாட்டின் பெயரில் கினிகத்ஹேன பொலிஸார் பலாங்கொடையில் வைத்து கைது செய்துள்ளனர். இவர் முச்சக்கர வண்டிகளை திருடி அவற்றை மாற்றி விற்பனை செய்வதோடு, முச்சக்கர வண்டிகளை திருடி உதிரி பாகங்களை கழற்றி அவற்றின் நிறங்களை மாற்றி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பெயரில் கினிகத்ஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் தொடர்ந்தும் இந்த சம்பவத்தை செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பலாங்கொடை மற்றும் கினிகத்ஹேன பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் மார்ச் 31 க்கு முன் சரியான தகவல்களை வழங்கி நன்மைகளை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்- நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களின் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தகுதி சரிபார்த்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பரிசீலிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அதிகளவானவை களுத்துறை மாவட்டத்திற்குரியவை எனவும் அது, 46% என்று குறிப்பிட்ட அமைச்சர், பதுளை மாவட்டத்தில் 34%, வீதமும், காலி மாவட்டத்தில் 32% வீதம் என்ற அடிப்படையில் முழு நாட்டையும் உள்ளடக்கிய…
கொழும்பு கோட்டை – மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த இலகு புகையிரதத் திட்டத்தை அமைக்க முன்மொழியப்பட்டது. கொழும்பு – மாலபே உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பணிபுரிவதால், இந்த புகையிரதச் சேவையின் மூலம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்திய பிறகு, இந்த திட்டம் 2020 இல் தொடங்கி 2024 நடுப்பகுதியில் முடிக்கப்பட ஏற்பாடாகி இருந்தது. இந்தத் திட்டத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்குகிறது. அதற்காக ஜப்பான் அரசாங்கம் 1,850 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் காரணமாக இந்த இலகு புகையிரதத் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான கடந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் விளைவாக இரத்துச் செய்யப்பட்ட இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. 16 கிலோமீற்றர் நீளம் மற்றும் 16 நிறுத்தும் நிலையங்களுடன்…
3 பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் முதன்முறையாக இந்நாட்டு விவசாயிகளுக்கு நெற்செய்கைக்குத் தேவையான சேற்று உரம் (TSP) ஏற்றிய MV INCE PACIFIC என்ற கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பலில் 36,000 மெட்ரிக் டொன் TSP உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இதேபோன்ற மேலுமொரு சேற்று உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது. ஐ நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த சேற்று உரம் (TSP) வழங்கப்பட்டுள்ளது. 2022/23 பெரும்போகத்தில் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொண்ட அத்துடன், 2023 சிறு போகத்தில் நெற்செய்கை மேற்கொண்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டில் உள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் இந்த சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய ஒரு ஹெக்டயருக்கு 55 கிலோ கிராம் வீதம் இந்த உரம்…
உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன
உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு (15) முற்பகல் இடம்பெற்றது. செனாரோ மோட்டார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் வாகன சாவி மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இலங்கை வங்கியின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் செனாரோ மோட்டார் தனியார் நிறுவனம்,1.5 பில்லியன் ரூபா முதலீட்டில் யக்கல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய உதிரிப்பாக ஒன்றிணைத்தல் தொழிற்சாலையின் ஊடாக ஆரம்ப கட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் மூலம் 35% பெறுமதி கூட்டப்பட்டு இந்த SENARO GN 125 மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்கின்றது. இந்த பெறுமதி சேர்த்தலை…
நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணையவழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 69வது நிகழ்வாக “மறைந்து போன ஒரு மகிடிக் கூத்து: ஆய்வும் அது சார் ஆவணப்படுத்தலும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் 18.03.2023 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம்பெறும். இக்கலந்துரையாடலை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புல தொழில்நுட்பக் கலைகள் துறையின் தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். நூலக நிறுவனமானது அனைவரையும் கலந்துரையாடலில் பங்குபற்றி பயனுறுமாறு அன்புடன் அழைக்கின்றது. திகதி- 18.03.2023 சனிக்கிழமை நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்) இணைப்பு – https://us02web.zoom.us/j/81415584070 Zoom Meeting ID : 81415584070
மழை நிலைமை : மன்னாரிலிருந்துபுத்தளம், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரைகாணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். (வளிமண்டலவியல் திணைக்களம்)
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சட்டக்கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் செயல்பட்டுவருவதாகவும், சட்டக்கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்படும் இடமாற்றங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட நிலைமையின் அடிப்படையில் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான ஆலோசனைகள் மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, சிதம்பரபுரம்- அருள்மிகு ஈழத்து பழனி முருகன் திருக்கோயில் அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் ஐயனே வேல்முருகா ஆறுதலைத் தந்தெம்மை வாழவைக்க வந்திடைய்யா நிம்மதியை நாடிநிற்கும் எங்களுக்கு என்றும் சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா வேல்தாங்கி நின்றிருந்து அருளுகின்ற ஐயனே வேல்முருகா வேதனைகள் போக்கியெம்மை வாழவைக்க வந்திடைய்யா வெற்றியையே நாடிநிற்கும் எங்களுக்கு என்றும் சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா குன்றின் மேல் கோயில் கொண்டு காட்சி தரும் ஐயனே வேல்முருகா குவலயத்தில் பெருமையுடன் வாழவைக்க வந்திடைய்யா கேடில்லா நல்வாழ்வை நாடிநிற்கும் எங்களுக்கு என்றும் சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா தமிழ்த் தாயின் காவலனாய்த் துலங்குகின்ற ஐயனே வேல்முருகா தளர்வில்லா மனவுறுதி தந்தெம்மை வாழவைக்க வந்திடைய்யா திறமைமிகு நல்வாழ்வை நாடிநிற்கும் எங்களுக்கு என்றும் சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா நம்பித் தொழும் அடியார் நலன் காக்கும் ஐயனே வேல்முருகா நித்திய அமைதி தந்து…