Author: Thana

கிளிநொச்சி, கல்மடு குளத்திற்கான கள விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை போன்றவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் தரப்பினருடன் கலந்துரையாடினார். ‘நீர்ப்பாசன செழுமை’ எனும் திட்டத்திற்கு அமைய உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் கல்மடு குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை நேற்று(15.03.2023) பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், இத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதியினை இத்திட்டத்திற்காக உலக வங்கி ஒதுக்கியுள்ள நிலையிலேயே மேலும் 300 மில்லின் ரூபாய் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. கல்மடு குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் 18 அடியிலிருந்து 26 அடி உயரமாக உயர்த்தப்படுவதுடன் அப்பகுதியைச் சேர்ந்த 75 இற்கு மேற்பட்ட நன்னீர் மீன்பிடி குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதுடன் இரண்டாயிரம்…

Read More

மெய் பாதுகாவலரின் துப்பாக்கியை காணவில்லை. இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்கில சாலிய எல்லாவள அவர்களின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கி காணாமல் போய் உள்ளது. சில தினங்களுக்கு முன் மேற்குறிப்பிட்ட விசேட அதிதிகளின் மெய் பாதுகாவலர் குறித்த துப்பாக்கியை பையில் வைத்து இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்கில சாலிய எல்லாவள அவர்களின் பலாங்கொடை இல்லத்தில் உள்ள பாதுகாவலர் அறையில் வைத்து விட்டு தாம் விடுமுறையில் சென்றுள்ளார். விடுமுறை முடிந்தது மீண்டும் தான் கடமைக்காக வந்தபோது குறித்த பையில் துப்பாக்கி இருக்கவில்லை என்பதால் இந்த விடயம் குறித்துபலாங்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் . தொடர்ச்சியான ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டபிள்யு.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். ரயில் சேவை அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (15/03/23) சேவைக்கு சமூகமளிக்காத அனைவரிடமும் அது பற்றி விளக்கம் கோரவிருப்பதாகவும் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Read More

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் இணுவில் அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோயில் சீர்மைமிகு நல்வாழ்வை அளிக்கின்ற தாயே சீர்மை குன்றா பெருவாழ்வைத் தந்தருள வேண்டும் சுதந்திரமாய் நாம் வாழ அருளளிப்பாய் அம்மா இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா வளம் கொண்ட தமிழ் மண்ணில் வந்துறையும் தாயே வலுவுடனே வாழும் வழி தந்தருள வேண்டும் சுகம் கொண்டு நாம் வாழ அருளளிப்பாய் அம்மா இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா நம்பிக்கை தந்தெம்மை ஆட்கொள்ளும் தாயே நிம்மதி நிறைவுடைய வளவாழ்வைத் தந்தருள வேண்டும் நிதானமாய் நாம் வாழ அருளளிப்பாய் அம்மா இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா தூயமனம் கொண்டோர் நெஞ்சம் உறைகின்ற தாயே தெளிவான மனநிலையைத் தந்தருள வேண்டும் துணிவு கொண்டு நாம் வாழ அருளளிப்பாய் அம்மா இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா அன்புடனே அரவணைத்து அருளளிக்கும் தாயே திருப்தியுடன் வாழும் நல்ல வாழ்வினைத்…

Read More

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான்னின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணைகள் கடந்த 4 ஆண்டுகளாக இடம்பெற்று வந்துள்ளதுடன் குற்ற ஒப்புதல் வாதப்பிரதிவாதங்கள், பிணை விண்ணப்பம் என தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இதன் போது 25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி, பிரதிவாதி வெளிநாடு செல்லவும் பிணையாளர்கள் வெளிநாடு செல்லவும் தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் சஹ்ரானின் மனைவி ஆஜராகி கையொப்பமிட வேண்டும்…

Read More

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட GR 14 ரக ரிவோல்வர் துப்பாக்கியை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் லுணுகலை கிவுலேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரும் லுணுகலை பல்லேபங்குவ பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரும் நேற்றைய தினம் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த இரு சந்தேகநபர்களையும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய லுணுகலை உடபங்குவ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மேலும் ஒரு சந்தேக நபரை லுணுகலை பொலிஸார் இன்றைய தினம் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை நாளைய தினம் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா

Read More

பசறை நகரில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு , மின்சார கட்டண உயர்வு, வரி அறவீடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் கொட்டும் மழையிலும் தீப்பந்தம் ஏந்தி பாதாதைகளை சுமந்தவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் மடுல்சீமை செல்லும் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு நடைபவணியாக தீப்பந்தங்களை ஏந்தியவாறு பரகொல்ல செல்லும் சந்தி வரை சென்று பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ராமு தனராஜா

Read More

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுணுகலை கிவுலேகம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக கை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது அத்தோடு கிவுலேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் லுணுகலை பல்லேபங்குவ பகுதியை சேர்ந்த 38 வயதுடைய மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது இரு சந்தேகநபர்களிடமும் லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த இரு சந்தேகநபர்களையும் பசறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடவுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா

Read More

நானுஓயா நிருபர் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நுவரெலியாவில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு அழித்து நுவரெலியா பிரதான அஞ்சல் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். https://youtu.be/vN5am74Qp70 இப்போராட்டம் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன மாத்திரம் எந்தவித இடையூறும் இன்றி வழமைபோல் இயங்கியது ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டன. தபால் நிலையமும் , அரச , தனியார் பாடசாலைகளையும் மூடி இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர் , இதனால் நுவரெலியா பிரதான தபால் அலுவலகம் மற்றும் நானுஓயா தபால் அலுவலகங்கள் செயலிழந்து , தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், பல்வேறு தேவைகளின் பொருட்டு…

Read More

இளைய தலைமுறையினரை பாதிக்கும் சமூக சீர்கேடுகளையும் சட்ட விரோதச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மேலும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை பிரதேசத்திற்கான நன்மைகளாகவும் எமது மக்களுக்கான வாழ்வாதாரமாகவும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்தக் கலந்துரையாடல் கருத்து தெரிவிக்கும் போதே, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பதில் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் மற்றும் துறைசார் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் பிரதானமாக போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது உணவுப்…

Read More