Author: Thana
(அந்துவன்) நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது. அங்கு கழிவு தேயிலை அறைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று (18.03.2023) அதிகாலை தொழிற்சாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டு, தீ கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. கந்தப்பளை பொலிஸார், தோட்ட மக்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்க முற்பட்டபோதிலும், தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின்போது தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவரும் இருக்கவில்லை. இழப்பு தொடர்பில் இன்னும் உரிய வகையில் மதிப்பீடு இடம்பெறவில்லை.
“மனித வள” தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் அனைவரையும் தொழில் ஆணையாளரின் கீழ் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பியகம, கட்டுநாயக்க மற்றும் வத்துப்பிட்டிவல ஆகிய சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் மத்தியில், “அநீதியின் இழைகள் – Threads of Injustice” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் “மனித வளம்” தொழிலாளர்களின் உரிமைகள் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மீறப்படுவது தெரியவந்துள்ளது. “போரம் ஏசியா” என்ற சர்வதேச அரசு சார அமைப்பின் உள்ளூர் பிரதிநிதியான சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை நடத்திய இந்த ஆய்வின் ஊடாக “மனித வள”‘ தொழிலாளர்களின் சேவை உரிமைகளை பாதுகாக்கும் வகையில், அரசு மற்றும் தொழிற்சாலை முகாமையாளர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆடைத் துறையில் பணிபுரியும் “மனித வள” தொழிலாளர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டு மில்லியன். கடினமான பணிச்சூழல்கள் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் விடுப்பு எடுப்பதற்கான சுதந்திரத்திற்காக “மனித வளத்தை” நாடுகிறார்கள் என குறித்த ஆய்வு அறிக்கை காட்டுகிறது. தொழிற்சாலைகளில்…
அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ் அப் செயலி ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் இதனை தெரிவித்துள்ளது. 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பள்ளி காலத்தில் அலுவலகத்திற்கு மாணவி வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாணவியின் தாயார் தனது கையடக்கத் தொலைபேசியில் நிர்வாணப் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், அது குறித்து தனது மகளிடம் கேட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் தாயும் மகளும் கம்பஹா காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்ததை அடுத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக…
வவுனியாவில் விதை உளுந்து சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 125,000 கிலோ உளுந்து விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு விவசாய திணைக்களத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு விதைப்புக்கு ஏற்ற விதைகளாக விற்பனை செய்யப்பட்டுவருவதாக வவுனியா விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் த.யோகேஸ்வரன் (17) தெரிவித்துள்ளார். சந்தையில் உளுந்திற்கு அதிக கேள்வி காணப்படுகின்றது. இதுவரை விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தினால் வவுனியா மாவட்ட விவசாயிகளிடமிருந்து 125,000 கிலோ உளுந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து தலா 900 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து சுத்தம் செய்யப்பட்டு, விற்பனைக்கான விதை உளுந்தuக விவசாயிகளுக்கு கிலோ 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்டதன் பின்னர் சுமார் 88,000 கிலோ விதை உளுந்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்பதாக வவுனியா விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த தரமான விதைகளுக்காக பல மாகாணங்களில் இருந்து அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயல் தாக்கியதால், தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மலாவியின் ‘தெற்கு மலாவியில் பெரு வெள்ளம் ஏற்படும். சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது’ என்று அந்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 326-ஐ தாண்டியுள்ளதாகவும், நூற்றுக் கணக்கானவர்களைக் காணவில்லை என்றும், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்து உள்ளதாகவும், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், வீதிகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.இந்த நிலையில், பிளாண்டயர் அருகே புயலால் பேரழிவுக்குள்ளான பகுதியைப் பார்வையிடச் சென்ற அந்த நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளிலிருந்து மக்களை மீட்கவும், இறந்தவர்களின் உடலை மீட்கவும் உலகளாவிய உதவி…
இராணுவத்தினரால் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடுகள் நிர்மாணிப்பு அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகளின் சாவிகள் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 64வது காலாட் படைப் பிரிவின் 643வது காலாட் பிரிகேடின் படையினரால் முட்டியங்காட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த திருமதி ஜே. அன்டோனிதாஸின் குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது இலங்கை பீரங்கி படையினர் தங்களுடைய தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் திறன்கள் மற்றும் தேவையான மனிதவளத்தைப் பயன்படுத்தி வீட்டை நிர்மாணித்துள்ளனர், அதே நேரத்தில் 643வது காலாட் பிரிகேடின் தளபதி கேணல் சந்தன விக்கிரமநாயக்க அவர்கள் நாட்டிலுள்ள தனது தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் நண்பர்களின் மூலம் மூலப்பொருட்களுக்கு தேவையான செலவினங்களை திரட்டினார். இதேவேளை, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் (SFHQ-J) 51வது காலாட்படை பிரிவின் 511வது படையணியானது தமது தொழில்நுட்ப மற்றும்…
சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர் லிஸ்டீரியா (Listeria)நோயால் உயிரிழந்தமை சுகாதாரத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் லிஸ்டீரியா நோயால் பீடிக்கப்பட்டு நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கடந்த மாதம் 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு லிஸ்டீரியா நோய் தொற்றியுள்ளமை ஆரம்ப பரிசோதனைகளில் உறுதியானதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார். சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில் வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ முன்னதாக தெரிவித்திருந்தார். சிவனொலளிபாதமலை வனப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரும் யாத்திரையில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவரும் வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வினாவியபோது பதிலளித்த சப்ரகமுவ மாகாண சபை ஆளுனர்…
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், கன்னியா அருள்மிகு சிவன் திருக்கோயில் ஆதிசிவன் திருக்கோயில் அமைந்த எங்கள் பூமி ஆதரவு தந்தெம்மை ஆளுகின்ற பூமி சிந்தையிலே உறைகின்ற சிவனார் உறைபூமி கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி இராவணனின் தாயாருக்கிறுதி சடங்கு செய்யப்பட்ட பூமி இன்றும் என்றும் எங்கள் உரிமையுடை உயர்ந்த நல்ல பூமி என்றும் எங்கள் உரிமை சொல்லும் உத்தமனார் பூமி கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி கோணேச நாதர் அருள்கொண்ட புனித நல்ல பூமி கோணலில்லா நேர்வழியை அருளுகின்ற பூமி கேடுகளைக் களைந்தெம்மை வாழவைக்கும் பூமி கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி வெந்நீர் ஊற்றுகள் கொண்ட சிவனாரின் பூமி ஆணவத்தை சிதைத்தழிக்கும் ஆண்டவனார் பூமி அச்சம் தவிர்த்தெமக்கு ஏற்றம் தரும் பூமி கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி குளக்கோட்டன் ஆட்சி செய்த தமிழர்களின் பூமி குறைவில்லா நிறைவுகளை அருளுகின்ற பூமி கொட்டம் அடக்க வரும் இறை…
மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (17.03.2023) கைச்சாத்திடப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனமான ‘Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்குகின்றது. இதன்படி மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி வழங்கப்படவுள்ளது. புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இரு தரப்புக்கும் இடையிலான உடன்படிக்கையே இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலைமையின் கீழ் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் இடைவிலகளை தடுப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பமாகின்றது. அதேவேளை, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில், இலவச சத்துணவு வேலைத்திட்டமும்…
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சிறுவன் ஒருவன் மஹியங்கனை வைத்தியசாலையில் அடையாளம்.
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த 15 வயது சிறுவனின் பாட்டி அண்மையில் சிறிபாதை பகுதிக்கு சென்று மீண்டும் சிறுவனின் வீட்டுக்கு வருகை தந்ததாகவும் தெரியவந்துள்ளதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ராமு தனராஜா