Author: Thana
இலங்கையில் இரண்டு இடங்களில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. கோமரன்கடவல பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் 3 மெக்னிடியுட் அளவில் நிலவு பதிவானது. அதேநேரம் கிரிந்தையில் நேற்று மாலை 2.5 மெக்னிடியூட் அளவில் ஒரு நில அதிர்வு பதிவானதாக சுரங்க தொழில் மற்றும் கட்டிட ஆய்வு பணிமனை தெரிவித்துள்ளது.
அங்குருவாதொட்ட படகொட சந்தியில் கடந்த 17/03 அன்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் படகொட யதவர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மங்கள பிரேமவர்தன என்ற நபராவார். சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக படகொட சந்தியில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயணித்துக் கொண்டிருந்த உடரட மெனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்தார். நேற்று (18) பிற்பகல் 1 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில், ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த ரயில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்தது. காயமடைந்தவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து கோபமடைந்த அவர் குடிபோதையில் ரயில் வீதிக்கு வந்து ரயிலை நிறுத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. 41 வயதுடைய நபர் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் குறித்த நபர் அதே ரயிலில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த நபர் ஹட்டன் டிக்கோயா போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவர் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொட்டாஞ்சேனை பரமானந்தா மாவத்தையில் நேற்று (18/03)இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவர் (மெகனிக்) ஒருவர் காயமடைந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் இறந்த பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் மோப்ப நாய் ´ஏகர்´ மூலம் அவரது வீடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். இராணுவ சிப்பாயின் விரல் நகங்கள் மற்றும் சாரத்தில் சேறு படிந்திருந்த நிலையில் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், சந்தேகநபரான இராணுவ சிப்பாய் தன்…
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா நேற்று (18) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கார் விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் இன்று (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது. குறித்த முட்டை இருப்புக்கள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த முட்டைகளை பேக்கரி தொழிற்சாலைகளுக்கு 40 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் வெள்ளவத்தை – அருள்மிகு ஐஸ்வரியலட்சுமி தத்துவத் திருக்கோயில் கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட தாயே குறைவில்லா நிறை வாழ்வை அருளிடவே கருணை செய்வாய் அம்மா நிம்மதியாய் நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே அன்பு கொண்டு அரவணைத்து ஆதரிக்கும் தாயே அச்சமில்லா வளவாழ்வைப் பெற்றிடவே கருணை செய்வாய் அம்மா மகிழ்வு கொண்டு நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே துன்பங்களைத் துடைத் தெறிந்து துயர் போக்கும் தாயே துணிவு கொண்ட உயர் வாழ்வை அருளிடவே கருணை செய்வாய் அம்மா தீயபகை நோய்களின்றி நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே முத்தேவியர் ஒருங்கமர்ந்து அருளுகின்ற தாயே முன்னேற்றம் கொண்ட வாழ்வை அருளிடவே கருணை செய்வாய் அம்மா முத்தமிழும் உயர்வுபெற நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே…
அக்கரப்பத்தனை அன்பு பாலர் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கான பிரியாவிடை அக்கரப்பத் தனை ஆக்ரோவா கோவில் மண்டபத்தில் பாடசாலையின் பொறுப்பாசிரியரின் தலைமையில் இன்று (18/03/23)நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச மதத் தலைவர்களும் ,மாணவர்களின் பெற்றோர் உட்பட ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்றெகுலர்ஸ் விநோதயம் அறநெறி கல்வியகத்தின் ஏற்பாட்டில் இன்று மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது. போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகவழக்கறிஞர் மாரிமுத்து பரமேஸ்வரி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அடையாளம் அமைப்பின் மகளிர் பிரிவு பொறுப்பாளர்செல்வி ஐஸ்வர்யா,நு/எல்ஜின் தவி ஆசிரியைஇராசு பிரயதர்ஷினி,ஆகியோரும்விசேட விருந்தினர்களாக அக்கரபத்தனை காவல் நிலைய உத்தியோகத்தர் திரு.மதியழகன்,நு/சென்றெகுலர்ஸ் தவி ஆசிரியர் திரு.ப.இரவிச்சந்திரன், சென்றெகுலர்ஸ் தோட்ட நிர்வாகத்தின் சார்பில் கள உத்தியோகத்தர்கள் சுரேஸ்,குணா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்தப் போட்டியில் சிங்கப் பெண்கள் மலையகப் பெண்கள், குறிஞ்சி மலர்கள், அக்னி சிறகுகள், மலையகப் பெண்கள் என்ற நாமத்தை கொண்ட நான்கு அணிகள் பங்கு பற்றி இருந்தது. போட்டியில் “சிங்கப் பெண்கள்” அணி முதலாவது இடத்தை பெற்று வெற்றி வாகை சூடியது. சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் இடம்பெற்ற முதலாவது மகளிர் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியாக இந்த போட்டி பதிவானது. போட்டிக்கு பக்கபலமாக சென்றெகுலர்ஸ் கங்கா விளையாட்டு கழகம்…