Author: Thana
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது…
மத்திய மாகாண பாடசாலைகளில் இன்று (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (15) நடைபெற இருந்த 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள், எதிர்வரும் 17 ஆம் திகதி நடத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், நாளை நடைபெறுவதாக இருந்த 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தவணைப் பரீட்சைகள் வரும் 22 ஆம் திகதி நடைபெறும். தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் 22 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை 2023.03.25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் ஏற்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு மாகாணசபைகளின் ஊடாக மாகாண அடிப்படையில் பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் இன்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இந்த போதை மாத்திரையை பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை இலக்கு வைத்து இந்த போதை மாத்திரை ஒன்றை 100 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர், நாட்டின் வரலாற்றில் மாணவர்களின்; எதிர்கால கல்விக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆசிரியர்கள் செயற்பட்டதில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில அரசியல் தேவைகளுக்கு ஏற்ப தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டு செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களை வீதிக்கு இறக்கி போராட்டங்களை நடத்துவது மிகவும் துரதிஷ்டவசமான நிலையாகும் என்றும் அமைச்சர் கூறினார். க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடுசெய்வதில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினை குறித்து கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதுடன், நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் விடைத்தாள்களை மதிப்பீடுசெய்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை 100 வீதத்திற்கு மேல் அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்றும் வெகுஜன…
ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கணித விஞ்ஞான திறன் வருடாந்த விருத்திப் போட்டிப்பரீட்சை.
க.பொ.த சாதாரணதர மாணவர்களின் திறனை கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் மென்மேலும் அதிகரிக்கும் நோக்கத்தோடு பாடசாலைகளுக்கிடையிலான கணித விஞ்ஞான திறன் வருடாந்த விருத்திப் போட்டிப்பரீட்சை , இம்முறை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கடந்த 4ஆம் திகதியன்று, ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடந்தேறியது. இப்போட்டிப் பரீட்சைக்கு மொத்தமாக 41 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 197 மாணவ மாணவிகள் தோற்றியது விசேட அம்சமாகும். இப்போட்டிப் பரீட்சையில் பங்குபற்றிய சகல மாணவ மாணவிகளும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் நான்காம் இடம் தொடக்கம் இருபதாம் இடத்தைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் பதக்கம் அணிவித்தும் விசேட சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி இப்போட்டியில் பங்குபற்றிய மாணவ மாணவிகள் பெற்றுக்கொண்ட மொத்த புள்ளிகளின் அடிப்படையில், தமிழ் மொழி மூலமாக தோற்றிய பாடசாலைகளில்…
வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், புத்தளம் (மணல்தீவு) சேகுவந்தீவு அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயில் வருவான் அருள் வான் முருகன் நம்பித் தொழுவோர் நலன் காப்பான் துன்பங்களைத் துடைத்தெறிவான் என்றும் அவன் சேகுவந் தீவிலுறை எங்கள் வேல்முருகன் அரவணைப்பான் ஆறுதலும் தான் தருவான் முருகன் தேடிப்பணிவோர் துயர் களைவான் மானம் காப்பான் என்றும் அவன் சேகுவந்தீவிலுறை எங்கள் வேல்முருகன் நன்மைகள் செய்வான் தீமைகள் தடுப்பான் முருகன் அடிபணிந்து பணிவோரின் குலம் காப்பான் குறைகளை நிறைவு செய்வான் என்றும் அவன் சேகுவந்தீவிலுறை எங்கள் வேல்முருகன் ஆறுதல் தருவான் ஆற்றலையும் தான் தருவான் முருகன் அன்பு கொண்டோர் உள்ளங்களில் உறைந்த்திருப்பான் தீயபகை கொடுமைகளைத் தடுத்திடுவான் என்றும் அவன் சேகுவந்தீவிலுறை எங்கள் வேல்முருகன் துணையிருப்பான், தூயவழி தருவான் முருகன் போற்றித் தொழுவோரின் புகழை உயர்த்திடுவான் நோய் நொடிகள் நெருங்காது காத்திடுவான் என்றும் அவன் சேகுவந்தீவிலுறை எங்கள் வேல்முருகன் வேல்கொண்டு வந்திடுவான் வேதனைகள் போக்கிடுவான் முருகன் உள்ளத்தில்…
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹப்புத்தளை காஹகல்ல பகுதியில் பண்டாரவளையில் சிங்கர் விற்பனை நிலையத்தில் இருந்து வியாபாரத்திற்காக பொருட்களை ஏற்றி ஹப்புத்தளை பகுதிக்கு சென்ற லொறி மீண்டும் பண்டாரவளை. நோக்கி சென்ற போது ஹப்புத்தளை பண்டாரவளை வீதியில் காஹகல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்ததில் படுகாயம் அடைந்த சாரதி காகொல்ல பிரதேச மக்களினால் உடனடியாக தியத்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த லொறியின் சாரதி 23 வயதுடைய பண்டாரவளை லியங்காவலை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
அனைத்து ரயில்வே திணைக்கள ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக ரயில்வே திணைக்கள ஊழியர்கள் இன்று (14) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந் நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு போக்குவரத்து அமைச்சிடம் இருந்து வந்துள்ளது.
வி.தீபன்ராஜ் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் கவன ஈர்ப்பு போராட்டம்.புதிய வரி அறவீட்டுக்கு எதிராக நுவரெலியா பிரதான அஞ்சல் நிலைய ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை 14.03.23 செவ்வாய்க்கிழமை நண்பகல் முன்னெடுத்தனர். குறிப்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசாங்கத்தின் சட்டவிரோதமான வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க கோரியும் , மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிராகவும் , அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக தெரிவித்து தபால் ஊழியர்களுக்குத் தேவையான சில கோரிக்கையை முன்வைத்தும் அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாராக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.