Author: Thana
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை: ஜே.டி. வான்ஸ் அதிரடி அறிவிப்பு! இஸ்லாமாபாத், [12 ஏப்ரல் 2026] – ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், அமெரிக்கா தனது நிபந்தனைகளில் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சுமார் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்: முயற்சி தோல்வி: அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்பட மறுத்ததால், இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. அமெரிக்காவின் இலக்கு: ஈரானின் அணுஆயுதத் திறனை முழுமையாகக் கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் பிரதான மற்றும் இறுதி இலக்கு எனத் துணை ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமெரிக்கா வெளியேற்றம்: பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு நன்றி: இந்த இக்கட்டான சூழலில், இரு நாடுகளுக்கும்…
இலங்கை, [12 ஏப்ரல் 2026] – நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை நிலவரம்: பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்: மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காலை வேளையில்: தென் மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த மழை: மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். பனிமூட்டமான நிலை: மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்…
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யும்போது மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற கணக்காய்வு அறிக்கை மற்றும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்துியுள்ளது. இதற்கமைய, 2009 ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பாக முறையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் (11) காலை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
இன்று முதல் 18ஆம் திகதி வரை பெட்ரோல் பெற QR தேவையில்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கருத்தில் கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர், அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார். சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விண்வெளியில் அதிக தூரம் பயணம் செய்து சாதனை: பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக இறங்கியது ஒராயன்!
ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை 5.30 மணியளவில் கலிபோர்னியாவின் சென் டியாகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. 10 நாட்கள் கொண்ட இந்த விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்து, ஒராயன் விண்கலம் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நிலவை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், விண்வெளி வீரர்கள் 406,771 கிலோமீட்டர் (252,756 மைல்கள்) தூரத்தைக் கொண்ட நிலவுப் பயணத்தைப் பூர்த்தி செய்துள்ளனர். மனிதகுலம் விண்வெளியில் இதுவரை பயணம் செய்த அதிகூடிய தூரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று
இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்! இஸ்லாமாபாத், பாகிஸ்தான்: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று (ஏப்ரல் 11) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்றடைந்த பிரதிநிதிகள் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டுத் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் (J.D. Vance) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் ஏற்கனவே பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர். மறுபுறம், ஈரானின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தலைமையிலான தூதுக்குழுவினரும் இஸ்லாமாபாத் சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. போர் பின்னணி: ஒரு பார்வை கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து பாரிய கூட்டுத் தாக்குதலை மேற்கொண்டன. இதனைத் தொடர்ந்து…
இலங்கை பொலிஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் – தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவகத்தில் ஆய்வு மையம் திறப்பு
2011 ஆம் ஆண்டின்44 ஆவது இலக்க தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவகச் சட்டத்தின் பிரகாரம், அந் நிறுவகத்தின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்ட புதிய ஆய்வு மையம் (Research Center) இன்று (2026 ஏப்ரல் 09) திறந்து வைக்கப்பட்டது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரோஹான் அபேவர்தன அவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் குழு, மேலும் இலங்கை பொலிசின் சிரேஷ்டப் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இவ் ஆய்வு மையம் திறக்கப்பட்டது, இலங்கை பொலிஸ் சேவையின் 160ஆம் ஆண்டு பொலிஸ் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச ஆய்வு மாநாட்டுடன் இணைந்து நடைபெறுவது சிறப்பம்சமாகும். இந் மையத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய நன்மைகள்: பொலிஸ் சேவையில் நவீன அறிவியல் ஆய்வு முறைகளை அறிமுகப்படுத்துதல், அதிகாரிகளின் தர்க்க மற்றும்…
லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தினால் (MTF) பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்குரிய புலமைப்பரிசில் தவணைப்பணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் மாதத்திற்கான 10,000 ரூபா மாதாந்த தவணைப்பணம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியம் தனது கொடுப்பனவுச் செயல்முறையின் வினைத்திறனை அதிகரித்துள்ளதன் காரணமாக, மார்ச் மாதத்திற்குரிய தவணைப்பணத்தை உரிய திகதிக்கு முன்னரே மாணவர்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக அந்த நிதியத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருமான விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் கடமைகளைப் புறக்கணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.