Author: Thana

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (ஏப்ரல் 20) ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன், அவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. புத்தாண்டு விடுமுறைக்காக அனைத்துப் பாடசாலைகளுக்கும் கடந்த 10 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனாதிபதிஅலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமோக வரவேற்பளித்ததுடன், இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்றமைக்காக  சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதுவே இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் எனக் குறிப்பிட்ட இந்திய துணை ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் தொடர்பில் தனது நன்றியினைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளிலும், குறிப்பாக வலுசக்தி…

Read More

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, (19) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர மகா நிகாயவின் சங்க தலைமையகத்திற்குச் சென்று, இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். இங்கு, மகா நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து, அனைத்து எதிர்கால நடவடிக்கைகளும் வெற்றியடையவும், வளமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்தித்து ஆசிர்வாதம் வழங்கினர். அமரபுர மகா சங்க சபையின் பதில் தலைவர் வண, மாகால்லே நாகித நாயக்க தேரர், பதிவாளர் வண, பலபிட்டியே சிறிசீவலி தேரர், பிரதிப் பதிவாளர் வண, அஹங்கம மைத்திரி மூர்த்தி நாயக்க தேரர், உதவிப் பதிவாளர் வண, ஹொரகல்லே சோரத தேரர், வண, நிதஹஸ்கம கல்யாணசிறி தேரர், வண, மஹமெவ்னாவே மங்கள தேரர், வண, அவிசாவேல்லே தம்மாநந்த தேரர் உள்ளிட்ட அமரபுர மகா நிகாயவின்…

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

Read More

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய உப ஜனாதிபதி இலங்கைக்கு வருகை இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (19) முற்பகல் இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியத் உப ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வரவேற்றதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இன்றைய தினம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் இலங்கையில் வசிக்கும் இந்திய சமூகத்தினரைச் சந்தித்த பின்னர், இந்திய உப ஜனாதிபதி வெள்ளவத்தை கதிரேசன்…

Read More

மலையக மக்களின் காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஸ்கெலியாவில் இயங்கும் சிட்ப்ஸ் (SIDPS) எனும் தொண்டு நிறுவனமும், கலையின் ஊடாக சமூக மாற்றத்தை நோக்கி நகரும் கொட்டகலையை கேந்திரமாக கொண்டு இயங்கும் சங்கு கலைக்கழகம் (SANGU SKK) தொண்டு நிறுவனமும் இணைந்து விருத்தி மற்றும் unops நிறுவனத்தின் அனுசரணையில் 15, 16 மற்றும் 18ம் திகதிகளில் சாமிமலை ,நோர்வூட், ஸ்டோக்ஹோம், மாநெலு, பொகவந்தலாவ , லிந்துல, நாகசேனை, மேரேயா, பசுமலை, டயகம, அக்கரபத்தனை,மன்றாசி, உடபுசல்லாவ, நிதண்டஹினா, ராகலை, கந்தபளை, நுவரெலியா, நானுஓயா ஆகிய பகுதிகளில் உள்ள நகரங்கள் கிராமங்கள் தோட்டங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வைத்தார்கள். துண்டு பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்ட கோரிக்கைகளான. Dithwa சூராவலியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாய பாதுகாப்பான இடங்களில் வீட்டு வசதிகளையும் அவர்களது பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தல். மலையக மக்களுக்கு வீடமை ப்பிற்க்காக பொருத்தமான…

Read More

செ.திவாகரன் நுவரெலியா 2026 வசந்த கால மலர் கண்காட்சி நிறைவு – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் வசந்த காலங்களில் மலர் கண்காட்சி நுவரெலியா மக்களையும் வருகை தரும் சுற்றுலா பயணிகளையும் ஊக்குவிக்கும் முகமாக நடத்தப்பட்டு வருகின்றனர் இதில். வணிகதுறை, தனியார் துறை, அரச துறைகள் என போட்டியிடுகின்றன. இவ்போட்டிகள் அனைத்தும் மூன்று கட்டங்களில் நடைபெறுகிறது குறிப்பாக வீட்டு பூந்தோட்டம், வேளியமைப்பு, தரையமைப்பு போன்ற போட்டிகளும் இதில் விசேடமாக வீட்டில் வளர்க்கும் பூக்களை வெட்டி உருவங்கள் அமைக்கும் பல்வேறு வகையான போட்டிகளை நுவரெலியா மாநகரசபையினர் நடத்தி அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு (18) மாலை பரிசுகள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினர் . இப் போட்டிகளில் வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்காக பேராதெனிய தாவரவியல் பூங்காவின் அரச அதிகாரிகள் நடுவர்களாக கடமை புரிந்து சிறந்த வெற்றியாளர்களை தேர்வு செய்தனர் . இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட போது அரசத்துறை…

Read More

கொழும்பு | 19 ஏப்ரல் 2026 சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகப்படியான பணத்தை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தீவிரமடையும் சோதனைகள் கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 680 பேருந்துகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, நடமாடும் பேருந்து பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே தெரிவித்தார். இந்தச் சோதனைகளின் போது கண்டறியப்பட்ட முக்கிய விடயங்கள்: கட்டண மீட்பு: அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளிடமிருந்து, மேலதிகமாகப் பெறப்பட்ட பணம் உடனடியாக மீண்டும் பயணிகளுக்கே பெற்றுக்கொடுக்கப்பட்டது. அபராதம்: விதிமுறைகளை மீறிய பேருந்து நிர்வாகங்களுக்கு எதிராகத் தலா ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. நேற்றைய நடவடிக்கை: நேற்று (18) ஒரு நாளில் மட்டும் 150 பேருந்துகள் சோதனையிடப்பட்டதுடன், அவற்றில் 12 பேருந்துகள் சிக்கியுள்ளன. “பயணிகளை அசெளகரியத்திற்கு உள்ளாக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகக்…

Read More

மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (18) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அயலவர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்து, காயமடைந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல் நடந்த இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதோடு, வீடொன்றிற்குத் தீ…

Read More

செ.திவாகரன் நுவரெலியாவில் போதிய பேருந்துகள் இன்றி நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள். தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டுத் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட தூர இடங்களுக்கு திரும்புவதற்காக இன்று (18) நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக இன்று வரை மலையக புகையிரத சேவைகள் முழுமையாக இல்லாததால் நுவரெலியா பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள், பேருந்துகள் போதியளவு சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவித்தனர். ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் நுவரெலியாவில் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் அதிகமாக வெளி மாகாணங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பேருந்து சேவையை நம்பி வருவது வழக்கமாகும் இவ்வாறு அதிக பயணிகள் வருகை தருவார்கள் என தெரிந்தும் போதுமான பேருந்துகள் இல்லை என குற்றம் சுமத்துகின்றனர். பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் உள்ளிட்ட இடங்களுக்குத்…

Read More