Author: Thana
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) முற்பகல் 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது. சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களுக்காக விண்ணப்பித்திருந்த 436 புதிய வைத்திய அதிகாரிகளுக்கான நியமன இடங்கள் நேற்று (08) அறிவிக்கப்பட்டன. அதற்கமைய, அவர்கள் இன்று முதல் வரும் 11 ஆம் திகதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட அரச வைத்தியசாலைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணியில் இணைய வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் இந்தச் செயற்பாடானது தமது சங்கத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை மீறும் செயல் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாகவே இன்று முதல் 48…
பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு விருந்து நடத்த வர்த்தகர்களிடம் பணம் பெறத் தடை: பொலிஸ் மா அதிபர் கடும் உத்தரவு
பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு விருந்து நடத்த வர்த்தகர்களிடம் பணம் பெறத் தடை: பொலிஸ் மா அதிபர் கடும் உத்தரவு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறும், வெளித்தரப்பினரின் நிதியுதவியுடன் உபசரிப்பு நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு: சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக வழங்கப்படும் அன்பளிப்புப் பொதிகள் (Gift Packs) மற்றும் பரிசு வவுச்சர்களை (Gift Vouchers) வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், சிரேஷ்ட அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் இவ்வாறான பரிசுகளைப் பொறுப்பேற்கக் கூடாது. நிதி வசூலிப்புத் தடை: புத்தாண்டு உபசரிப்புகளுக்காக கீழ்நிலை உத்தியோகத்தர்களிடம் பணம் வசூலிப்பதோ அல்லது வர்த்தக சமூகத்தினரிடம் நிதி கோருவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அரச நிதி ஒதுக்கீடு: பொலிஸ்…
புறக்கோட்டை “புநக்கோட்டை” ஆனது! – அரச பதாகைகளில் தொடரும் தமிழ் மொழிச் சிதைப்பு: மக்கள் விசனம்
புறக்கோட்டை “புநக்கோட்டை” ஆனது! – அரச பதாகைகளில் தொடரும் தமிழ் மொழிச் சிதைப்பு: மக்கள் விசனம்..சமூக ஊடகங்களில் நேற்று முதல் பெரும் விமர்சனத்திற்குள்ளான இந்த விடையம். நீண்ட கால புனரமைப்பிற்குப் பின்னர் இன்று (08-04-2026) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பெயர்ப்பலகைகளில் மலிந்து கிடக்கும் தமிழ் எழுத்துப் பிழைகள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரச நிதியில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அடிப்படைத் தமிழ் எழுத்துக்களைக் கூட சரியாகப் பயன்படுத்தாதது அரசின் மெத்தனப் போக்கையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மத்திய பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத் திரைப்பலகை மற்றும் அறிவிப்புப் பலகைகளில் சுமார் ஐந்து இடங்களில் பாரிய எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன: 1. **புறக்கோட்டை** என்பது **”புநக்கோட்டை”** என அச்சிடப்பட்டுள்ளது. 2. **கிளீன் (Clean)** என்பது **”கீளீன்”** என தவறாக எழுதப்பட்டுள்ளது. 3. **ஒத்துழைப்பு** என்பதில் **”ழை”**…
செ.திவாகரன் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம். கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் , காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் கெசல்கமுவ ஆற்றில் ஒரு பெண் சடலம் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுளது என நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். நோர்வூட் – பொககவந்தலாவா மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நோர்வூட் பாலத்திற்குக் கீழே ஆற்றில் சடலமாக மிதப்பதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகளினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது எனினும் சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் குற்ற நிகழ்வு விசாரணை அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
புனித நூல்களை எரிப்போம் என எச்சரிப்பது நாகரிகமற்ற செயல்: ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் கண்டனம்
புனித நூல்களை எரிப்போம் என எச்சரிப்பது நாகரிகமற்ற செயல்: ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் கண்டனம் யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்குப் புனித நூல்கள் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் அதற்கு எதிராகச் சில அமைப்புகள் விடுத்துள்ள எச்சரிக்கைகள் குறித்து, சர்வதேச இந்துமத குரு பீடாதிபதியும் அகில இலங்கை சபரிமலை சாஸ்தா பீடத்தின் குரு முதல்வருமான ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மதத்தவருக்கும் தமது மதத்தின் பெருமைகளை எடுத்துரைப்பதற்கும், தத்தமது சமய நெறிகளைப் பிரசாரம் செய்வதற்கும் முழுமையான உரிமை உண்டு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு பெற்றோர் தமது பிள்ளையை “நல்ல பிள்ளை” என்று போற்றுவதைப் போன்றே சமயப் பிரசாரங்களும் அமைய வேண்டும் என்றும், மாறாகப் பிற மதங்கள் தவறானவை என்று விமர்சிப்பதற்கோ அல்லது அவற்றை இழிவுபடுத்துவதற்கோ எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, ஒரு மதத்தின் புனித நூல்களை…
பசறையில் வீடு ஒன்றில் தீ விபத்து – சமையல் அறை முற்றிலும் சேதம் பசறை, மிதும்பிட்டிய கலபொட தோட்டப்பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று (07) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்புறத்தில் அமைந்திருந்த சமையல் அறையில் முதலில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் சமையல் அறையில் இருந்த அனைத்து உபகரணங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. எனினும், இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக, உற்சவ கால உணவுப் பட்டியல்களுக்கான (Catering Menu) கட்டணங்கள் இன்று (ஏப்ரல் 08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன, இந்த விலை அதிகரிப்பு தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிட்டார். விலை அதிகரிப்பு எவ்வளவு? சங்கத்தின் தீர்மானத்தின்படி, விலை மாற்றங்கள் பின்வருமாறு அமையும்: புதிய முன்பதிவுகள்: மே மாதம் முதல் மேற்கொள்ளப்படும் புதிய முன்பதிவுகளுக்கு 15% முதல் 20% வரை கட்டணங்கள் அதிகரிக்கப்படும். ஏற்கனவே செய்த முன்பதிவுகள்: ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்த உணவுப் பொதிகளுக்கு 10% மேலதிக கட்டணம் வசூலிக்கப்படும். விலையேற்றத்திற்கான காரணங்கள் இந்தத் தீர்மானம் தன்னிச்சையானது அல்ல என்றும், தொழில்துறையை வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதற்காகவே எடுக்கப்பட்டது என்றும் சங்கம் விளக்கியுள்ளது. இதற்கான முக்கிய…
கொழும்பு: தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவை (One Day Service) இன்று (ஏப்ரல் 08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சேவையானது, தற்போது அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்படவுள்ளது. முக்கிய விபரங்கள்: சேவை வழங்கப்படும் இடங்கள்: ஆட்பதிவுத் திணைக்களத்தின் பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிரதேச அலுவலகங்கள். யாருக்கு முன்னுரிமை: அவசர மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக அடையாள அட்டை கோருவோருக்கு மட்டுமே இந்த ஒருநாள் சேவை தற்காலிகமாக வழங்கப்படுகிறது. சாதாரண சேவைகள் இடைநிறுத்தம் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பைச் சீர்செய்யும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத காரணத்தினால், பின்வரும் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன: பிரதான மற்றும் பிரதேச அலுவலகங்களின் சாதாரண சேவைகள் (Normal Service). முன்வரிசைச் சேவைகள் (Front-end services). திணைக்களத்தின் அறிவிப்பு இது குறித்து ஆட்பதிவுத்…
ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போர்நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு அமெரிக்கா ஒரு பிரதான நிபந்தனையை முன்வைத்துள்ளது. சர்வதேச எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் உடனடியாக, முழுமையாக மற்றும் பாதுகாப்பான முறையில் திறக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) வலைத்தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப்: “பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான ஆலோசனைகளைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக இன்று இரவு முன்னெடுக்கப்படவிருந்த தாக்குதல்களை நிறுத்திவைக்க நான் சம்மதித்துள்ளேன். இது இரு தரப்பினருக்குமான ஒரு போர்நிறுத்த ஒப்பந்தமாக அமையும்.” அமைதி உடன்படிக்கையை நோக்கிய நகர்வு மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை…
இன்று (07/04/2026) காலை 10:30 மணியளவில் கொழும்பு – ஹட்டன் வழித்தடத்தில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் (இலக்கம்: NB 1180) பணப்பை ஒன்று காணாமல் போய் உள்ளது. குறித்த பணபையில் ரூபா 50,000/- வங்கிக் அட்டைகள்: 02 ATM அட்டைகள் மற்றும் 2 வங்கிப் புத்தகங்கள். ஆவணங்கள்: ஏனைய முக்கிய அடையாள ஆவணங்கள் என்பன இருந்துள்ளன. குறித்த காணாமல் போன உரிமையாளர் விபரம்: சரோஜா கலைவாணி (S. Kalaivani) அடையாள அட்டை இலக்கம்: 895280666V யாரேனும் குறித்த பணப்பையை கண்டெடுத்தால், தயவுசெய்து மனிதநேயத்துடன் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்: 📞 078-9013939 / 077-1401501 அவதானம்: புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு! சித்திரை புத்தாண்டு நெருங்கும் இவ்வேளையில், பொதுப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் பிக்பாக்கெட் (Pickpocket) திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும். எனவே பயணிகள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவது…