Author: Thana
மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்திய முன்னாள் சமூக சேவை அதிகாரி
ஊழல் குற்றச்சாட்டு: கட்டான பிரதேச செயலகத்தின் முன்னாள் சமூக சேவை அதிகாரி கைது மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், கட்டான பிரதேச செயலகத்தின் முன்னாள் சமூக சேவை அதிகாரி ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால் ஒரு பிள்ளைக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் ரூபா 10,000/- கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. கைதான அதிகாரி, இரண்டு பிள்ளைகளின் பெயரில் அந்த உதவித் தொகையைப் பெற்று, அதனை உரிய பிள்ளைகளுக்கு வழங்காமல் தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குடா பேதுரு ஆராச்சிலாகே சமன் ஸ்ரீயாரத்ன என்ற பெயருடைய குறித்த அதிகாரி, 2026 பெப்ரவரி 24 அன்று பிற்பகல் 12.45 மணியளவில் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலதிக…
ஹட்டனில் உழுந்து வடையில் பூச்சியும் ,சேவியட் பேப்பரும். ஹட்டனில் உள்ள நோர்வூட் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடந்த 23.2.2026 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அலுவலர்களுக்கு வழங்குவதற்காக ஹட்டனில் பிரபலமான ஹோட்டலில் 35 உழுந்து வடைகள் வாங்கப்பட்டு தேனீர் இடைவேளையின் போதுவழங்கப்பட்டுள்ளது. சகலரும் வடையை சாப்பிட்ட போது ஒரு அதிகாரி வடையினுள் இறந்த பூச்சி ஒன்று இருப்பதை கண்டுள்ளார். மற்றொரு அதிகாரி வடையினுள் சேவியட் பேப்பர் துண்டு இருப்பதை கண்டுள்ளார். இந்த விடயம் பிரதேஸ செயளாலருக்கு அறிவிக்கப்பட்டது. பிரதேச செயலாளர் இந்த விடயத்தை நகர சபைக்கு முறையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அம்பகமுவ சுகாதார அதிகாரிகள் வடையை பரிசோதித்த போது வடையில் சேவியட் பேப்பரும் பூச்சியும் இருப்பதை கண்டுள்ளனர். அதன் பின்னர் சுகாதார அதிகாரிகளும் கிராம உத்தியோகத்தரும் பிரதேச செயலக அதிகாரிகளும் குறித்த ஹோட்டலுக்கு சென்று பரிசோதித்து உள்ளனர். இதன் போது உணவு சட்டத்தை மீறிய குற்றசாட்டின்…
மலையகத்தில் ‘அஸ்வெசும’ கொடுப்பனவு வழங்கப்படும் நாட்களில் மதுபான விற்பனை அதிகரிப்பு: உரிமையாளர்கள் தகவல்
‘அஸ்வெசும’ கொடுப்பனவு மதுபான சாலைகளுக்கு ஜாக்பாட்? மலையகத்தில் அதிர வைக்கும் தகவல்! மலையகம்: அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம், மதுபான சாலைகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக மலையகப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தவணை நாட்களில் அதிகரிக்கும் வருமானம் சாதாரண நாட்களை விடவும், அரசாங்கம் ‘அஸ்வெசும’ தவணைக் கொடுப்பனவுகளை வழங்கும் நாட்களில் மதுபான சாலைகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மலையகத்தின் தோட்டப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மதுபான சாலைகளில் இந்தப் போக்கு அதிகளவில் காணப்படுவதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குடும்பப் பொறுப்பை மறக்கும் பயனாளிகள் அஸ்வெசும பணத்தைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளில் கணிசமானோர், தங்களது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகள் அல்லது பொறுப்புகளைப் பற்றிச் சிந்திக்காமல், அப்பணத்தை நேரடியாக மதுபானங்களுக்காகச் செலவிடுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள் சிலர்: “அஸ்வெசும…
தலங்கம இரட்டைக் கொலை: இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலையில் வைத்து கைது! தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலையில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்கல தெங்வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் பிடிபட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் காலி, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன், இவரை மொனராகலைக்கு அழைத்துச் வந்த அங்கொட பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொனராகலையில் உள்ள ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் கட்டுமானப் பணிகளுக்காகச் சேர்வதாகக் கூறி சந்தேக நபர் அங்கு வந்துள்ளார். நக்கல தெங்வத்தை பகுதியில்…
தென் மாகாணத்தில் மழை பெய்ய வாய்ப்பு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25.02.2026) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாட்டின் வானிலை நிலவரங்கள் பின்வருமாறு அமையும்: முக்கிய வானிலை நிலவரங்கள்: மழை பெய்யக்கூடிய பகுதிகள்: தென் மாகாணத்தின் சில இடங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏனைய பகுதிகள்: நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். பனிமூட்டமான நிலை: காலை வேளையில் மத்திய, சபரகமுவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். கடல் பகுதிகளுக்கான அறிவிப்பு: மழை: காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். காற்று: கன்கசந்துறையிலிருந்து…
ஹொரணையில் மனைவியின் தாக்குதலுக்குள்ளான கணவன் பலி: இரு பெண்கள் கைது! ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில், மனைவியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (24) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் நேற்று காலை தனது வீட்டின் அருகிலுள்ள மற்றுமொரு வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களைத் தாக்கி, அங்குள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, அந்த வீட்டில் இருந்த பெண், இது குறித்து தாக்குதல் நடத்திய நபரின் மனைவிக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மனைவி, அங்கிருந்த மற்றைய பெண்ணுடன் இணைந்து தனது கணவரைத் தாக்கியுள்ளார். இதன்போது துடைப்பம் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் பலமாகத் தாக்கியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட…
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணைய வழி ஊடாக சட்டவிரோதமான முறையில் (பிரமிட் முறை) பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து மடிக்கணினிகள் (Laptops) 23, கைத்தொலைபேசிகள் 11, திசைவிகள் (Routers) 7, குரல் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் 9 மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் 3,280 கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு 05, ஜாவத்தை வீதி மற்றும் டொன் கரோலிஸ் வீதி ஆகிய இடங்களில் சில நாட்களுக்கு முன்னர் தற்காலிகமாக தங்கியிருந்த சீன பிரஜைகள் குழுவொன்று, சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாக கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சீன பிரஜைகள் இலங்கையில் தங்கியிருந்து வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணி, பல்வேறு நபர்களை ஏமாற்றி பிரமிட் மோசடியில் ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கை கெமா மையத்தின் கதிர்வீச்சு திறனை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது..
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அணுசக்திபையின் ஒரு பகுதியாக காணப்படும் இலங்கை கெமா மையத்தின் கதிர்வீச்சு திறனை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து ஆராய்வதற்காக, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன, அமைச்சின் அதிகாரிகளுடன், அண்மையில் பியகம ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் நிறுவப்பட்ட மையத்தைப் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது, அமைச்சரும் அவரது குழுவினரும் கெமா மையத்தின் தற்போதைய நிலை மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கெமா கதிர்வீச்சு சேவைகளைக் கவனித்து, அதிகாரிகளுடன் வசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களை வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சவை அனுமதி
தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களை வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது. அரச துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் 1,050 இன் கீழ் தற்போது 150,000 பணியாளர்கள் அளவில் பணிபுரிகின்றமை பதிவாகியுள்ளது. 1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களை முறைமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்கள் தொடர்பாக செயற்படுவதற்கான சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் குறித்த நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களை பயனுள்ள வகையில் ஒழுங்குபடுத்தவும் வினைத்திறனாக சேவையை வழங்குவதற்கு குறித்த சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால், வழங்கப்படுகின்ற சேவையின் இயல்புகளுக்கமைய சேவை வகைப்படுத்தல், குறித்த வகைப்படுத்தலின் அடிப்படையில் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களைப் பயிற்றுவித்தல்,…