Author: Thana
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 தொடர்பில் சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்கவும் – அரசாங்க நிதி பற்றிய குழு அதிகாரிகளுக்குப் பரிந்துரை
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 நாளாந்த வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கான சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக குழு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்றும், இந்தக் கொடுப்பனவை வழங்கும் நடைமுறைக்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டியிருப்பதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்கு இந்தத் தொகை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமல், தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய வழங்கப்படுவதாகவும், இதனை எந்தவொரு நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், இந்த ரூ.200 தொகை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செலுத்தாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று வருட காலத்திற்காக தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தக் காலம் முடிவடைந்ததும் இக்கொடுப்பனவைத் தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குழுவுக்கு வருகை…
இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான வரலாற்றுச் சமர் மீண்டும் ஆரம்பம்
15-வது “ஜனசக்தி லைஃப் இந்துக்களின் பெருஞ்சமர்” – இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான வரலாற்றுச் சமர் மீண்டும் ஆரம்பம்! இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள, இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15-வது “ஜனசக்தி லைஃப் இந்துக்களின் பெருஞ்சமர்” (Battle of the Hindus) மாபெரும் கிரிக்கெட் போட்டி மீண்டும் களைகட்டவுள்ளது. இம்முறை போட்டியை நடத்தும் இந்துக் கல்லூரி கொழும்பு, தனது 75-வது ஆண்டு நிறைவை (பவள விழா) கொண்டாடும் வேளையில் இப்போட்டி நடைபெறுவது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்போட்டியானது வரும் மார்ச் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு பி. சரா ஓவல் (P. Sara Oval) சர்வதேச மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இப்போட்டிக்கு ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (Janashakthi Insurance PLC) தலைமை அனுசரணை வழங்குகிறது. இது குறித்து…
செ.திவாகரன். நுவரெலியா ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள் கொடூரமான அவலநிலை. நாட்டில் கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் நிலவிய டித்வா’ புயல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நுவரெலியா ரேந்தபொலL ஹக்கலை பகுதியைச் சேர்ந்த 23 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக கூடாரங்களில் எதுவித அடிப்படை வசதிகளின்றி இன்றுவரை வசித்து வருகின்றனர். இந்த தற்காலிக கூடாரங்கள் குறிப்பாக அதிக குளிர் மற்றும் அதிக வெப்பமான காலநிலையை தாங்கும் நிலை அற்றது எனவும் , கடுமையான வானிலை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு திறன் அற்றது எனவும் தங்கியிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடிநீரைப் பெற்றுக்கொள்ள பல மைல் தூரம்சென்று வர வேண்டியுள்ளது குளிப்பதற்கும், உடைகளை கழுவுவதற்கும் பாரிய சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது எனவும் எமது அவல நிலைகுறித்து, பலரிடம் முறையிட்டும், எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எமக்கு எதிர்கால மொன்று இருக்குமென்று, நாம் நினைக்க…
செ.திவாகரன். நுவரெலியாவில் 73 வாகனங்களுக்கு காலக்கெடு – திடீர் வாகன சோதனையில் நடவடிக்கை நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன சோதனையின் போது, 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடத் (26) தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையின் கீழ் நுவரெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்தச் சோதனையில் நுவரெலியா – பதுளை மற்றும் நுவரெலியா – உடப்புசல்லாவா பிரதான வீதியூடாகப் பயணிக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூரப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் உட்பட 100 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது பெற்றோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களில் அதிகளவான புகையை வெளியேற்றும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த வாகனங்களை சீர்செய்வதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கொண்ட திடீர் வாகனச் சோதனையின்போது 73 வாகனங்களுக்கு உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும் என…
இலங்கைத் திரைத்துறையில் புதிய மைல்கல்லாக உருவாகும் “அந்தோனி”: மார்ச் 13ம் திகதி 2026 இல் உலகளாவிய திரையரங்க வெளியீடு
இலங்கைத் திரைத்துறையில் புதிய மைல்கல்லாக உருவாகும் “அந்தோனி”: மார்ச் 13ம் திகதி 2026 இல் உலகளாவிய திரையரங்க வெளியீடு இலங்கைத் தமிழ்த் திரைத்துறையை சர்வதேச தரத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பாரிய முயற்சியாக, முற்றிலும் உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய, தென்னிந்தியக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள “அந்தோனி” (Anthony) திரைப்படத்தின் விசேட ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் எழில்மிகு கடற்கரைப் பின்னணியில் ஒரு மீனவனின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், ஒரு காதல் மற்றும் த்ரில்லர் பாணியிலான கதைக் களத்தைக் கொண்டுள்ளது. தனது மனைவியுடன் அமைதியான வாழ்க்கையைத் தேடும் அந்தோனி என்ற மீனவனின் வாழ்வை, வேறொரு மீனவரால் ஏற்படும் சவால்கள் எவ்விதம் மாற்றியமைக்கிறது என்பதை இப்படம் உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கிறது. ‘ஓசை பிலிம்ஸ்’ (Osai Films) தயாரிப்பு நிறுவனத்தின் கலைவளரி சக ரமணதாஸ் சத்தியநாதன் மற்றும் சுகந்தினி ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய…
புத்தளத்தில் 491 மில்லியன் ரூபா செலவில் 491 வீடுகள்: அமைச்சர் சந்தன அபயரத்ன முன்னிலையில் திட்டம் ஆரம்பம்! புத்தளம்: “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் இலக்கை யதார்த்தமாக்கும் வகையில், புத்தளம் மாவட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கான “சொந்தமாக ஓரிடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்பு உதவித் திட்டம் நேற்று (25) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசு நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: நிதி ஒதுக்கீடு: புத்தளம் மாவட்டத்திற்காக 491 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள்: மாவட்டத்தின் 548 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக 491 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. நிதியுதவி: ஒரு பயனாளிக்கு தலா ஒரு மில்லியன் ரூபா (10 இலட்சம்) நிதி உதவி வழங்கப்படுகிறது. முதல் கட்டம்: ஆரம்ப நிகழ்வின் போது முதற்கட்டமாக 125 பயனாளிகளுக்கு வீடமைப்பு…
உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இலங்கை- எதிர்மறை விமர்சனங்கள் ஒரு தடையாக அமைந்தன அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ள நிலையில், அணியின் வீழ்ச்சிக்குக் காரணமான விடயங்கள் குறித்து அணித்தலைவர் தசுன் ஷானக்க பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார். புதன்கிழமை கெத்தாராம மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்களால் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொடரிலிருந்து வெளியேறிய முதல் அணியாக இலங்கை மாறியது. எதிர்மறை விமர்சனங்கள் ஒரு தடையாக அமைந்தன அணியைச் சுற்றி நிலவிய கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் வீரர்களின் மனநிலையைப் பாதித்ததாக சானக்க தெரிவித்தார். “நாங்கள் எவ்வளவு நேர்மறையாக இருக்க முயன்றாலும், வெளியே எந்நேரமும் எதிர்மறைத் தன்மையே நிலவுகிறது. இது இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய இழப்பு. மைதானத்திற்கு வெளியே போட்டியைப் பார்க்காமலேயே பலர் பல விடயங்களைப் பேசுகிறார்கள்,” என அவர் கவலை வெளியிட்டார். எதிர்கால வீரர்களின் மனநலத்தைப் பாதுகாக்க இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும்…
சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: வன்முறைகளைத் தடுக்க பொலிஸார் விசேட பாதுகாப்புப் பணியில்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடையும் நிலையில், மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினத்துடன் நிறைவடைகின்றன. கடந்த காலங்களில் பரீட்சை முடிந்த கையோடு மாணவர்கள் பாடசாலைச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, மோதல்களில் ஈடுபடுவது போன்ற வன்முறைப் போக்குகள் அவதானிக்கப்பட்டன. இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் நடவடிக்கை பரீட்சை நிலையங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் குழுக்களாக இணைந்து வன்முறைகளில் ஈடுபடுவதைத் தடுக்க விசேட ரோந்துப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் பரீட்சை முடிந்து வீடு திரும்பும் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார்…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாட்டின் வானிலை நிலவரம் பின்வருமாறு: மேல் மாகாணம்: மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள்: தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. மூடுபனி எச்சரிக்கை காலை வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி நிலையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக: மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள். காலி, மாத்தறை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்கள் கடல் பகுதிகளுக்கான வானிலை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். காற்று: காங்கேசன்துறையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில்…
லலித் அதுலத் முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்திற்காக நிதி திரட்டும் ஆன்லைன் அதிர்ஷ்ட லாபச்சீட்டு (Lottery) கொள்முதல் நடவடிக்கையில் ஊழல் புரிந்த குற்றச்சாட்டில், வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹாபொல நிதியத்திற்காக ஆன்லைன் லொத்தர் முறையை ஆரம்பிக்க நடத்தப்பட்ட கொள்முதல் நடவடிக்கையின் போது, வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளருக்கு விலைமனுவை வழங்காமல் அரசாங்கத்திற்கும் அந்த நிறுவனத்திற்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மீண்டும் விலைமனுக்களைக் கோரிய போது, ஏற்கனவே முதல் ஏலத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றுமொரு தரப்பிடம் இருந்து 1,000,000/- ரூபா இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் பின்வரும் அதிகாரிகள் 24.02.2026 அன்று காலை கைது செய்யப்பட்டனர்: ஏ.எம். பிரியங்கா மத்தும பண்டார அத்தப்பத்து – வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் (காலை…