Author: Thana

மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு (30) இரவு ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 147 பேர் காயமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் செபு மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிற்றாலயங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. போகோ நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இடிந்து, அங்கு கூடியிருந்தவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

அம்பாறை -பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று (30) குழந்தையின் தந்தை  மற்றும் தாய் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் 17 வயதுடையவர்கள் மற்றும் திருமணமாகாத காதல் ஜோடி என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுக்கு பிறந்த குழந்தையை, தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கைவிட முடிவு செய்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த தந்தை, குழந்தையை தான் வளர்ப்பதாகக் கூறி பெற்றுக்கொண்டார். பின்னர், அவர் தனது உறவுக்கார பெண்ணை தொடர்பு கொண்டு, ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்ட குழந்தையை கண்டெடுத்ததாகவும், அதை வளர்க்க முடியுமா எனவும் கேட்க ஒப்புக்கொண்ட உறவினர், குழந்தையின் தொப்புள்கொடி முறையாக வெட்டப்படாததால் இரத்தம் கசிந்தத நிலையில் குழந்தை ஒலுவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து குழந்தை கைவிடப்பட்டதாக கதை பரவியது…

Read More

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கர்’ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பு 15 இல் வசிக்கும் 36 வயதுடைய குறித்த சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பழனி ஷிரான் க்ளோரியன் அல்லது “கொச்சிக்கடை ஷிரான்” இன் சீடராக அடையாளம் காணப்பட்டுள்ளார். கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் உள்ள மஹவத்த பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சம்பவத்தில், வந்த காரின் சாரதியாக இவர் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், 19.08.2025 அன்று பேலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொன்று, மற்றொரு நபரை கடுமையாகக் காயப்படுத்திய குற்றத்தைச் செய்யத் தேவையான துப்பாக்கிகளை கொண்டு…

Read More

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்…

Read More

இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளனர். இந்த இரண்டு தலைமுறையினரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக எங்கள் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின் உலகம் உண்மையான மற்றும் அழுக்கற்ற உலகம் என்பதால் அது மிகவும் அழகானது. அந்த அழகை அனுபவிக்க அவர்களுக்கு தடையற்ற வாய்ப்பை வழங்குவது ஒரு சமூகத்தின் பொறுப்பாகும். உரிமைகளுடன் கடமைகளும் பொறுப்புகளும் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் ஒரு அரசாங்கமாக, சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நாங்கள் எப்போதும் உறுதிபூண்டுள்ளோம். சிறுவர் என்பது யார் என்பதை மிகவும் நடைமுறை மற்றும் விரிவான முறையில் வரையறுப்பதன் மூலம் சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான தலையீடுகளை நாங்கள் செய்து வருகிறோம். அதில் சகல…

Read More

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும். எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்குமிடையிலான உறவுகள் பழைமையான வரலாற்றையும் பல தசாப்த கால இராஜதந்திர உறவுகளையும் கொண்டவை. இரு நாடுகளுக்குமிடையேயான வரலாற்றுத்தொடர்பு பிரதானமாக பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மனிதவள ஒத்துழைப்பை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சவூதி அரேபியா இலங்கையின் முக்கிய வர்த்தகப்பங்காளிகளில் ஒன்றாகும். வரலாற்று ரீதியாக, இஸ்லாமிய உலகிற்கும் தெற்காசியாவிற்குமிடையேயான வர்த்தகப்பாதைகளில் இலங்கை ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. இப்பரிமாற்றங்கள் சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான கலாசார மற்றும் சமயத் தொடர்புகளுக்கு அடித்தளமிட்டன. 1970 முதல் இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றன. குறிப்பாக, 2024/2025ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சவூதி அரேபியாவின் அபிவிருத்தித் திட்டங்கள் சவூதி அரேபிய இராச்சியம், இலங்கையின் தேசிய அபிவிருத்தித்…

Read More

“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நன்மையடைந்தனர்..! சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்கும் நோக்கில், இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் (KSrelief) வழங்கி வரும் மனிதாபிமானப் பணிகளின் தொடர்ச்சியாக, இம் மையம் பார்வையின்மை மற்றும் பார்வையின்மையோடு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை நிறைவு செய்ததது. இத்திட்டமானது, கிழக்கு இலங்கையில் சம்மாந்துறை மற்றும் சுப்ரகமுவா மாகாணத்தில் எம்பிலிபிட்டிய போன்ற பகுதிகளில் உள்ள இரண்டு…

Read More

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (30) காலை டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவர் யொஹெய் சசகாவாவைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு யொஹெய் சசகாவா தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக இதன் போது அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் முன்வைத்தார். இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும், இலங்கையில் சமூக சேவைக்கான அவரது நீண்டகால அர்ப்பணிப்புக்கும் யொஹெய் சசகாவாவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட…

Read More

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும். ஆதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும். இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Read More

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. ​ இது இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ​ புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், தற்காலிக அனுமதிப் பத்திரத்தை நுகேகொடையில் உள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ​ மேலும், தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பதாரர்கள் இனி வெரஹெரயில் உள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

Read More