Author: Thana
தூரப் பயண பஸ்கள் நிறுத்தும் உணவகங்களில் பொருட்களின் விலைகள் அதிகமாயின் முறையிடுமாறு பயணிகளுக்கு கோரிக்கை
தூரப் பயண சேவை பஸ்கள் தேநீர் இடைவேளைக்காக நிறுத்தும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு, குடிபானம், குடிநீர் போத்தல்கள் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின் நுகர்வோர் அதிகார சபையின் “1977” என்ற குறுஞ்செய்தி சேவைக்கு தெரியப்படுத்துமாறு அதிகார சபை தெரிவித்துள்ளது. பெந்தழுவ, பறகடுவ பிரதேசங்களில் தூர சேவை பஸ் வண்டிகள் தேநீர் இடைவேளைக்காக நிறுத்தும் சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு உணவு மற்றும் குடிபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு இணங்க, இரத்தினபுரி மாவட்டத்தின் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் சுற்றிவளைப்பில் மேற்கொண்டு உணவக உரிமையாளர்களை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததன் பின்னர் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பூநாகல, கபரகலயில் அமைந்துள்ள மண் சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் வீடமைப்புப் பணிகளை கண்காணிக்கும் விஜயமொன்றை பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அண்மையில் (01) கபரகல பிரதேசத்தில் மேற்கொண்டார். இச்சுற்றுப்பயணத்தில் மாவட்ட செயலாளர் சஜித நாமல் ஹேரத், பயிற்சி நிருவாக சேவை உத்தியோகத்தர் குழுவின் (2025) உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வென்னப்புவ சேர் அல்பர்ட் எப்.பீரிஸ் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் நான்கு சம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்கேற்றதுடன், தேசிய விளையாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர். இம்முறை போட்டித் தொடரில் MAS பெண்கள் அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி மாஸ்டர்ஸ், சம்பியன்ஷிப் மற்றும் சுப்பர் லீக் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தியது. அதேநேரம், ஆண்கள் ‘A’ பிரிவிலும் MAS அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பெண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவு இறுதிப் போட்டியில் MAS கேஷுவல்லைன் அணி மலிபன் அணி 25-09, 25-14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்பிரிவில் MAS கேஷுவல்லைன் அணியின் ரேணுகா நில்மினி சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்த தாக்குதலாளி (Best Spiker) விருதுகளையும், நயனா ஜயரட்ன சிறந்த பந்து வழங்குநர் Best Setter) விருதையும் வென்றனர். இதனிடையே, விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான ‘A’ பிரிவு இறுதிப் போட்டியில், முதல் செட்டில் யுனிச்செலா அணி தோல்வியை சந்தித்த போதிலும், அடுத்த இரண்டு செட்களில் முன்னிலை பெற்று பிராண்டிக்ஸ் அணியை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. இப்பிரிவில் எஸ்.எச். இசுரு சிறந்த தாக்குதலாளி விருதையும், ஆர்.ஏ.ஏ. மலிந்த சிறந்த பந்து வழங்குநர் விருதையும் தட்டிச் சென்றனர். பெண்களுக்கான சுப்பர் லீக் பிரிவு இறுதிப் போட்டியில், MAS கேஷுவல்லைன் அணி ஹைட்ரமனி அணியை 3-0 (25-22 | 25-14 | 25-16) என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. இப்பிரிவில் சிறந்த வீராங்கனை, தாக்குதலாளி, பந்து வழங்குநர், தடுப்பாளி, சர்வர் மற்றும் பாதுகாப்பாளி என அனைத்து தனிநபர் விருதுகளையும் MAS கேஷுவல்லைன் அணி வீராங்கனைகள் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதேவேளை, சம்பியன்ஷிப் பிரிவிலும் MAS கேஷுவல்லைன் அணி ஒமேகா லைன் அணியை 3-0 (25-18 | 25-15 | 25-19) என தோற்கடித்து 2025 வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரின் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்பிரிவில் பி.எச்.பி. திஸாநாயக்க, ஆர்.எம்.பி. உத்தரா மற்றும் எம்.டி.சி.ஐ. சிவந்திகா ஆகியோர் தனிநபர் விருதுகளை வென்றனர். சுப்பர் லீக் – பெண்கள் பிரிவு: வெற்றியாளர் – MAS இன்டிமேட்ஸ் கேஷுவல்லைன் தனிநபர் விருதுகள் சிறந்த வீராங்கனை – டபிள்யூ.ஏ.எஸ். மதுவந்தி – கேஷுவல்லைன் சிறந்த ஸ்பைக்கர் – கே.டி. வசனா – கேஷுவல்லைன் சிறந்த செட்டர் – எச்.எம்.டி.எம். ஹேரத் – கேஷுவல்லைன் சிறந்த பிளாக்கர் – கே.பி.எஸ். செவ்வந்தி – கேஷுவல்லைன் சிறந்த சர்வர் – டபிள்யூ.ஏ.எஸ். மதுவந்தி – கேஷுவல்லைன் சிறந்த லிபரோ – டபிள்யூ.எச்.எச்.ஏ.டி. சஞ்சீவனி – கேஷுவல்லைன் சம்பியன்ஷிப் – பெண்கள் பிரிவு: வெற்றியாளர் – MAS இன்டிமேட்ஸ் கேஷுவல்லைன் தனிநபர் விருதுகள் சிறந்த வீராங்கனை – பி.எச்.பி. திசாநாயக்க -…
உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொடை பகுதி ஒன்றின் பாடசாலை மாணவர்கள் சிலர் மது போத்தலை கொண்டு வந்த நிலையில் கைது செயப்பட்டுள்ளனர். இவ்வாறு நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மீட்டியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட நான்கு மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரண தர தேர்வு எழுதவிருப்பவர்கள் என பொலிஸார் தேர்விக்கின்றனர். கடந்த (01) மதியம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் நான்கு மாணவர்களும் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சிறுவர்கள் தினத்தன்று நேற்று முன்தினம் (1) பாடசாலைக்கு மது போத்தலைலை கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மது கொண்டு வந்ததாக பாடசாலையிலிருந்து கிடைத்த தகவலின்படி, அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது, ஹிக்கடுவையில் உள்ள ஒரு மதுபானக் கடையில் இருந்து மது வாங்கி தண்ணீர் போத்தலில் ஊத்திக்கொண்டு தெரியவந்தது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதேநேரம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும், இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிருவரும் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஏதேனும் வினவ வேண்டுமானால், பின்வரும் தொலைபேசி இக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208/ 0112-784537/ 0112-785922. அத்துடன் 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினவ முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல, ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்றும், எதிர்காலச் சந்ததியினருக்காக அந்த மரக்கன்றுகளைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார். “சோபா சிப்வதுல” செயல்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறினார். Clean Sri Lanka திட்டத்தின் கீழ், இலங்கை ஹதபிம அதிகார சபை சுற்றுச்சூழலை நேசிக்கும் உணர்ச்சி மிக்க தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில் முன்னெடுக்கும் “சோபா சிப்வதுல” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அக்டோபர் 02 ஆம் திகதி ரத்மலானை இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமர் தனது கைகளால் பாடசாலை வளாகத்தில் ‘நா’ (Ironwood) மரக்கன்றை நாட்டினார். அதற்குச் சமாந்தரமாக பாடசாலை மாணவர்களும் அதே நேரத்தில் 100 கன்றுகளை நட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடசாலைகளில் பசுமை வலயங்களை உருவாக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைவாக,…
ஒக்டோபர் 3 ஆம் திகதி -உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும். அதன்படி, 2025. 10. 02 ஆம் திகதி வழமையாக மூடப்படும் நேரத்திலிருந்து 2025. 10. 04 ஆம் திகதி வழமையாக திறக்கும் நேரம் வரை மதுபானக் கடைகள்அனைத்தும் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார். – இலங்கை மதுவரித் திணைக்களம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு (ITLS) நேற்று (02) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக, தேசிய மட்டம் முதல் பாடசாலை மட்டம் வரை பாடசாலை போட்டிகள், ஆராய்ச்சி மன்றங்கள் மற்றும் கைத்தொழில் கண்காட்சிகள் உட்பட, செப்டம்பர் முதல் நடைபெற்ற தொடர்ச்சியான நிகழ்ச்சிகளின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். சுற்றுலா அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ பழைய மாணவர் சங்கம் (AATEHM) மற்றும் அதன் நிலைபேறான சுற்றுலா பிரிவு (STU) மற்றும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை , இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை (SLTDA), இலங்கை…
பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்
2026 ஏப்ரல் 1 முதல், பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், குறித்த திகதியிலிருந்து, நிர்ணயிக்கப்பட்ட தரங்களைப் பூர்த்தி செய்யாத பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை முற்றிலும் தடைசெய்யப்படும் எனக் கூறினார். தற்போது, குழந்தைகளுக்குப் பால் வழங்கப் பயன்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், மாணவர்களின் மதிய உணவுப் பெட்டிகள், மற்றும் தண்ணீர் போத்தல்கள் பல்வேறு விலைகளில் சந்தையில் விற்கப்படுகின்றன. இவற்றில் சிலவற்றிற்கு தரச் சான்றிதழோ அல்லது பயன்பாட்டிற்கு ஏற்றவை என்பதைக் குறிக்கும் அடையாளமோ இல்லை. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, சில தயாரிப்புகளில் புற்றுநோய்க் காரணிகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, 2026 ஏப்ரல் 1 முதல், உணவு…