Author: Thana

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

மழை நிலைமை: சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் சிலாபத்திலிருந்து மன்னார்…

Read More

பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரசுப் பணியில் உள்ள பட்டதாரி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் பல வழக்கு நடவடிக்கைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு இன்னும் முடிவடையாததால், அந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மேற்குறிப்பிட்ட பரீட்சை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மேலும் கூறுகிறது.

Read More

மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 11 ஆம் தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு கையடக்க தொலைபேசி கொண்டு வந்தமை குறித்து கேள்வி எழுப்பியதால் ஆசிரியரை மாணவன் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

RMIT – இலங்கை புத்தாக்க மையம் (RMIT Sri Lanka Innovation Hub)அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல் இலங்கையில் RMIT புத்தாக்க மையமொன்றை (Innovation Hub) நிறுவுவது குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன், அவுஸ்திரேலிய Melbourne Institute of Technology (RMIT) பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளுக்கு இடையே கடந்த மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) ஒருங்கிணைப்பின் கீழ் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. RMIT இலங்கை புத்தாக்க மையத்தை நிறுவுவதன் ஊடாக தற்போதுள்ள கூட்டு பட்டப் படிப்புத் திட்டங்களை (Joint PhD) மிகவும் செயற்திறனுடன் செயல்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும். இதன் ஊடாக இலங்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணவும், அவற்றுக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) தீர்வுகளை வழங்கவும், இந்த திட்டங்களை ஆராய்ச்சி கொள்கைகள் மற்றும் தேசிய தேவைகளுடன்…

Read More

ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஜனாதிபதி நாடு திரும்பினார் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பினார். செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்றதுடன், ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba), ஜப்பானிய நிதி அமைச்சர் கதோ கசுனொபு(KATO Katsunobu), பாதுகாப்பு அமைச்சர் டி.எம் நகடானி(DM Nakatani), நிப்பொன் மன்றத்தின் ஆரம்பத் தலைவர் யொஹெய் சசகாவா(Yohei…

Read More

மூன்று பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஒரு நாட்டின் கலாச்சார அடையாளம், வரலாற்று பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய ஒழுக்கங்கள் புறக்கணிக்கப்பட்டு, குறுகிய தன்னிச்சையான மற்றும் குருட்டுத்தனமான போலித்தனத்தின் அடிப்படையில் அரசை நிர்வகிக்க முயற்சித்தால், அது நாட்டில் அராஜகத்திற்கும் முழு சமூகத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று தேரர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தால் உடல் ரீதியான தண்டனையை குற்றமாக்குவதற்கு முன்மொழியப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 82வது பிரிவில் திருத்தம் செய்வதும், ஓரினச்சேர்க்கையை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு ஆதரவளிப்பதும் இத்தகைய கடுமையான ஒழுக்க அராஜகத்திற்கும் பல சமூக நெருக்கடிகளுக்கும் காரணங்களாகும் என்று தேரர்கள் தங்கள் கடிதத்தில் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர். பௌத்த தத்துவ விழுமியங்களின் தனித்துவம் மற்றும் அவற்றின் நடைமுறை பயன்பாடு நிலையான சமூக வளர்ச்சிக்கு எவ்வாறு வழிவகுக்கிறது என்பது குறித்து எப்போதும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் ஜனாதிபதி, இந்த விடயத்தில்…

Read More

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub நன்கொடை வழங்கல் ஸ்மார்ட் அரச சேவை நிலையங்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில் Huawei Sri Lanka நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட Ideahub ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு வழங்குதல், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) முற்பகல் நடைபெற்றது. இதன்படி அடையாள ரீதியாக 10 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub வழங்கப்பட்டது. இந்நாட்டின் அரச நிறுவனங்களுக்கு Ideahub வழங்கும் வேலைத்திட்டம் Huawei Sri Lanka நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, Huawei Sri Lanka பிரதம நிர்வேற்று அதிகாரி Zhang Jinze, பிரதான ஆணையாளர் (ஆசிரியர் கல்வி) இரோஷினி கே. பரணகம, பிரதி பணிப்பாளர் (கல்வி) என். எல். சி. பி. இந்திக ஆகியோருடன்,…

Read More

ஜனாதிபதி ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2025-10-01

Read More

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு நேற்று (30) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் காலை விருந்துபசாரம் நடைபெற்றது. ஜப்பான்-இலங்கை பாராளுமன்ற லீக்கின் ஏற்பாட்டில் காலை விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருநாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளுடன் செயற்பட எதிர்பார்ப்பதாக ஜப்பான் – இலங்கைப் பாராளுமன்ற லீகின் தலைவர் யொசிதாகா சின்டோ (Yoshitaka Shindo) மற்றும் பொதுச் செயலாளர் யுகோ ஒபுசி (Yuko Obuchi) ஆகியோர் இங்கு தெரிவித்தனர். இரு நாடுகளின் பரஸ்பர நலன்களுக்காக அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தாங்கள் செயல்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஜப்பான்-இலங்கை பாராளுமன்ற லீக், முன்னாள் ஜப்பானிய பிரதமர் கெய்சோ ஒபுசி(Keizo Obuchi) தலைமையில் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்…

Read More