Author: Thana

500 ட்ரோன்களின் கண்கவர் காட்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கும் 2026 லங்கா பிறீமியர் லீக் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்ட விருந்தாக, 2026 லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் தொடக்க விழா கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் அரங்கேறவுள்ளது. இத்தொடரின் உரிமத்தைப் பெற்றுள்ள ஐபிஜி நிறுவனம், இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 500 ட்ரோன்களைக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான வான்வெளி ஒளிக்காட்சியைத் (Drone Show) தொடக்க விழாவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில், போட்டி ஒன்றின் தொடக்க விழாவிற்காக பிரம்மாண்டமான நேரடிப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இம்முறை எல்பிஎல் தொடருக்கான நுழைவுச் சீட்டுகளை ஜூலை முதலாம் திகதி முதல் BookMyShow இணையதளம் அல்லது செயலி ஊடாகக் கொள்வனவு செய்ய முடியும். விறுவிறுப்பான டி20 கிரிக்கெட் போட்டியுடன், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் இணைந்து, சர்வதேச தரத்திலான ஒரு விளையாட்டு திருவிழாவாக இந்தத் தொடக்க விழா அமையவுள்ளது.…

Read More

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4765 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4465 ரூபாய் ஆகும். அதேபோல், 1910 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1792 ரூபாவாகும். 890 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 835 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More

ஹெட்போன் (Headphones) அல்லது இயர்போன் (Earphones) அணிந்து இசை கேட்டுக்கொண்டு வீதிகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது. ​போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த எச்சரிக்கையை விடுத்தார். ​ ​இதுவரை இத்தகைய கவனக்குறைவாகச் செயல்படும் பாதசாரிகளுக்கு காவல்துறையினரால் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும், தற்போது வீதி விபத்துக்களின் அபாயம் மற்றும் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக நேரடியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். ​விபத்துகளின் தற்போதைய நிலை (2026) ​இலங்கையில் வீதி விபத்துக்கள் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி…

Read More

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், ‘அத்மிரல் ஒப் த ப்ளீட்’ (Admiral of the Fleet) பதவியைப் பெற்றவருமான வசந்த கரன்னாகொட, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவை, அடிப்படைத் தகுதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக (Executive Officer) இணைத்துக் கொண்டமை தொடர்பான விசாரணைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி அவரை பிரித்தானியாவின் ராயல் கடற்படை அகாடமிக்கு (Britannia Royal Naval College) பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த ஜூன் 16 மற்றும் 22 ஆகிய திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சமுகமளிக்குமாறு வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் முன்னிலையாகியிருக்கவில்லை. இதே குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் கடற்படை…

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (03) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

நாட்டின் எதிர்கால சந்ததியினரைப் பாதிக்கும் நச்சுப் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக, அரசாங்கம் அதிரடியான புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. பிள்ளைகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் (Pharmacies) மூலம் எளிதாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது. தேசிய செயல்பாட்டுச் சபைக் கூட்டத்தில் முடிவு போதைப்பொருள் ஒழிப்புக்காகச் செயற்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டுச் சபையின் கூட்டம், முப்பீட மகா சங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே இந்த விசேட சோதனைப் பொதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பிற்கான பிற முக்கிய திட்டங்கள்: இக்கூட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டங்களை வலுப்படுத்தவும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன: நவீன…

Read More

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத் தடையானது நாளை ( 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான அனைத்துப் பகுதிகளில் இந்த நீர் விநியோகம் அமுலாகவுள்ளது. அத்துடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல,கொலன்னாவ, ஐனுர், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை,கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை…

Read More

உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 2026: குரோஷியாவை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது போர்த்துகல்! உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் விறுவிறுப்பான 2-வது வெளியேற்றும் சுற்று (Round of 32) ஆட்டத்தில், குரோஷியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துகல் அணி அடுத்த சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது. ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் இவான் பெரிசிச் (Ivan Perišić) அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போர்த்துகல் அணி, பதில் கோல் அடிக்க தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. அதன்பலனாக ஆட்டத்தின் 68-வது…

Read More

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபையினால் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகள் நாளை (3) முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான இக்கொடுப்பனவின் முதற்கட்டத்தின் கீழ், தகுதிபெற்ற 621,761 பயனாளிகளுக்காக 3,108,805,000.00 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக 380,695,000.00 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதிகள் அனைத்தும் தகுதியான பயனாளிகளின் அஸ்வெசும வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்பில் இடப்படவுள்ளன. அதன்படி, தமக்குரிய கொடுப்பனவுத் தொகையை பயனாளிகள் அனைவரும் நாளை முதல் தத்தமது அஸ்வெசும வங்கிச் கணக்குகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் (செயற்பாடுகள்) டி.எல். பி. ரிஷான் தர்மசேன தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் உள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (STI) மற்றும் எச்.ஐ.வி (HIV) தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார். ​அரசாங்கத்தின் தீவிர கவனம் ​கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இன்றைய இளைஞர், யுவதிகளிடையே இத்தகைய நோய்த்தொற்று அபாயம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், இது குறித்து அரசாங்கம் மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். ​இது தொடர்பாக சுகாதார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், பிரதமர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள், தங்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே இந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ​டிஜிட்டல் திரைகளும் போதைப்பொருள் அபாயமும் ​இதேவேளை, இன்றைய மாணவர் சமூகத்தின் மனநல பாதிப்புகள் குறித்து…

Read More