Author: Thana

மட்டக்குளி பெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐந்து கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (01) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 40 வயதுடைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5 கிலோகிராம் 140 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய் பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு கைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

உலக வங்கியினால் (1) வெளியிடப்பட்ட சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டிற்கு அமைய, இலங்கை மீண்டும் ஒருமுறை உயர்-மத்திய வருமானம் பெறும் நாடாக (Upper-Middle Income Economy) தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், அந்த நெருக்கடியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2025 ஆம் ஆண்டாகும்போது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடிந்துள்ளதாக உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகள் மீண்டும் புத்துயிர் பெற்றமை, பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குத் தாக்கம் செலுத்திய முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம் இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இந்த நியமனம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் காஞ்சன பானகொட ஜூலை முதலாம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெறுகிறார். வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற டேமியன் பெர்னாண்டோ, 1991 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் 21வது ஆட்சேர்ப்பின் கீழ் நிறைவேற்று பிரிவின் கெடெட் அதிகாரியாக இணைந்துகொண்டார். திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தனது…

Read More

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்: இதற்கான நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க , இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026-06-30

Read More

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு முதன்முறையாகக் கூடியது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ (El-Niño) காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு முதன்முறையாக நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரித்தல், அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுச் செயல்பாடுகளை உறுதி செய்தல், அத்துடன் பொதுமக்களைத் தெளிவுபடுத்தி அனர்த்த அபாயத்தைக் குறைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்வினால் இந்த விசேட அமைச்சரவை உபகுழுவும் அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டன. விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன…

Read More

நாட்டின் திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ (Single Window) அனுமதி முறையொன்றை நிறுவுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போது ஒற்றைச் சாளர அனுமதி முறையை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கையில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள், பாடல்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளுக்காக அனுமதி கோரும் விண்ணப்பதாரர்கள், பல அரச நிறுவனங்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அனுமதி பெறும் செயல்முறை நீண்ட மற்றும் தாமதமான ஒன்றாக மாறியுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. எனவே, ஒற்றைச் சாளர அனுமதி முறையொன்றை நிறுவுவதற்குத் தேவையான முறையான வேலைத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. முன்மொழியப்பட்ட இந்த முறைமை குறித்து பொதுவான உடன்பாட்டுக்கு…

Read More

எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% பொருளாதார வளர்ச்சியை அடைவதில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் பங்களிப்பு பிரதானமானது. – ஜனாதிபதி தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளில் முன்னிலை வகிக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உள்நாட்டு தொழில்துறையினரை வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டிலுள்ள சாத்தியக் கூறுககளை அடையாளங் கண்டு அவற்றை வெற்றிகொள்ள அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழில்முனைவோருக்கும் அழைப்பு விடுத்தார். இப்பணியை…

Read More

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைகளுக்காகத் தனது கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை (Passwords) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமக்கு எதிரான விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்குமாறும், தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறும் கோரி சுரேஷ் சலே அண்மையில் உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார். தொடர் போராட்டம் காரணமாக அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்ததை அடுத்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி…

Read More

நாடு முழுவதும் பேருந்து கட்டணங்களை 12 சதவீதத்தால் (12%) அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பேருந்துப் பயணங்களுக்கான ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாயில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த புதிய கட்டணத் திருத்தமானது எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ரீதியில் அமலுக்கு வரவுள்ளது. பயணத் தூரம் மற்றும் பேருந்து சேவைகளின் வகைகளுக்கேற்ப கட்டணங்கள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன: 1. சாதாரண பேருந்து சேவை (Normal Service) 100 கிலோமீற்றருக்கும் குறைந்த தூரம்: கட்டணம் 12% ஆல் அதிகரிக்கப்படும். 100 கிலோமீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரம்: கட்டணம் 20% ஆல் அதிகரிக்கப்படும். 2. சொகுசு பேருந்து சேவை (Luxury Service) முதல் 100 கிலோமீற்றர் தூரம் வரை: கட்டணம் 12% ஆல் அதிகரிக்கப்படும். 100 கிலோமீற்றருக்கும் அதிக தூரம்: கட்டணம் 15% ஆல் அதிகரிக்கப்படும்.  குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 30 ரூபாய், இனிவரும் நாட்களில்…

Read More