Browsing: இலங்கை

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு இருக்கும் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.   ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என வலியுறுத்திய அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவது மொட்டு கட்சி உட்பட நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரின் கடமை எனவும் வலியுறுத்தியுள்ளார்.   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானங்களை எடுக்கும் கட்சி, எனவே தமது கட்சி சரியான தருணத்தில் அந்த முடிவை எடுக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.   இன்று (14) கண்டி மாவட்ட…

குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் கொள்கையில் இருந்து தற்போதைய அரசாங்கம் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டே அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்கேற்ப ஒவ்வொரு கிராமத்தையும் அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  (14) இடம்பெற்ற “மலை நாட்டு எழுச்சி தசாப்தம்” அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் சொந்த அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றறிக்கைகள் மூலம் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். மலைப் பத்தாண்டு திட்டம் இந்த ஆண்டு 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அந்த மாவட்டங்கள் கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் ஆகும். மலைப் பத்தாண்டு வேலைத்திட்டம் 10 மாவட்டங்களில் உள்ள 89 பிரதேச செயலகப் பிரிவுகளில் 4,498 கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கேகாலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 569 கிராம சேவகர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, கலிகமுவ, கேகாலை, மாவனெல்ல, ரம்புக்கன, ருவன்வெல்ல, வரகாபொல மற்றும் யட்டியந்தோட்டை ஆகியன அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளாகும். கேகாலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். கேகாலை மாவட்டத்தில் “மலை பத்தாண்டு” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1,100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உள்கட்டமைப்பை…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…

(எஸ். சினீஸ் கான்) எமது நாட்டிற்கு பெரும் வளமாக காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம், ஜீவனோபாயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார,…

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்…

நேற்றிரவு (13) மோதரையில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத் தில் ஒருவர் காயமடைந்துள்ளார். உணவகத்திற்கு முன்பாக காத்திருந்த நபர் ஒருவரை காரில்…

கம்பஹா மாவட்டத்தில் ஏற்படும் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் தொழில் மயமாக்களுடன் இம்மாவட்டத்தில் பிரதான சேவை வழங்கும் மத்திய நிலையமாக செயற்படுகிறது. அதனால் சுகாதார சேவைக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன்…

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளிடையே நீரிழப்பு நிலைமைகள் மற்றும் தோல் ஒவ்வாமை நோய்கள் அதிகரித்துள்ளன என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல விசேட…

வேலைகளை நிறைவு செய்யாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.   இந்த வருடத்துக்குள் இத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார். கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுக்கடன் மற்றும் உதவித் திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான ஒதுக்கீடுகள் ஏற்கனவே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அநுராதபுரம் மாவட்டத்தில் அறுதி உறுதிப்பத்திரங்கள் மற்றும் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வில் சனிக்கிழமை (10) கலந்து கொண்டு அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமத்திய மாகாண ஆளுநரின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் மஹிபால ஹேரத் தலைமையில் அனுராதபுரம் வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இங்கு 46 பயனாளிகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களும், 250 பயனாளிகளுக்கு 115 மில்லியன் ரூபா பெறுமதியான வீடமைப்பு கடனுக்கான   காசோலைகளும் வழங்கப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, அறுதி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது இவ்வருட இறுதிக்குள் 2000 அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, “கடந்த காலங்களில் காணி உரிமை வழங்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் முறைமை இல்லை. 1980/90 ஆண்டுகளில், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான வீடுகளின் உரிமையை தீர்த்து வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எமது மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்த காணி சொந்தமாக இல்லாததால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஜனாதிபதி அனைத்து அமைச்சுக்களுக்கும் அழைப்பு விடுத்தார். குறிப்பாக, உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றியமைக்க காணி அமைச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டது. அப்போது கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே காணி உரிமை வழங்கப்படும் என நம்பினோம். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் உறுதிப்பத்திரங்கள்  வழங்குவதை கட்டுப்படுத்தாமல் எமது பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு காணி உரிமை மற்றும் வீட்டு உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் முறையை நடைமுறைப்படுத்தியமைக்காக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வேலைத்திட்டம் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகும். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்பு உதவித் திட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒன்றரை ஆண்டுகளாக இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போதைய அரசு நிதியமைச்சின்  திறைசேரி மற்றும் பிற அமைச்சுகளுடன் இணைந்து, வீட்டு உதவி மற்றும் பில் செலுத்தும் முறைக்கான திட்டங்களைத் தயாரித்தது. போதுமான வருமானம் பெற புதிய நிகழ்ச்சி நிரலில் பணியாற்றினர். அதன்படி, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு, அப்போது நிறுத்தப்பட்டிருந்த வீட்டு உதவித் திட்டத்தின் எஞ்சிய நிதியை வழங்குவதற்குத் தேவையான முன்னுரிமையை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். தற்போதைய வட்டி விகிதத்தை விட குறைந்த வட்டியில் மக்களின் வீட்டுக் கனவை நனவாக்குவதற்கு தேவையான வசதிகளை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது. பயனாளிகள்…

ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கம்பளை, எத்கால பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை வைத்தியசாலையில் சேவையாற்றும் 49 வயதான வைத்தியர் ஒருவரே நேற்றிரவு 11…