பாலர் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின்- குவான்டொன் பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலையில், இளைஞர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் மூவர் மற்றும் பெற்றோர் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
