நியுசிலாந்திலாந்தின் ஒக்லன்ட் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒக்லன்ட்டில் ஆரம்பமாகியுள்ள பெண்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களுள் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இச்சம்பவம் தீவிரவாத செயற்பாடுகள் இல்லை என தெரிவித்துள்ள நியுசிலாந்தின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், கால்பந்தாட்டப் போட்டிகள் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
