வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில் பஸ் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அம்பேபுஸ்ஸவிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், லொறியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
