மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த ரயில் கடவையில் இன்று (09/08) காலை பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் கொள்கலன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
கொள்கலன் லொறி ரயில் கடவைக்குள் நுழைந்த போது, கொள்கலன் லொறியின் இயந்திரம் திடீரென நின்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கொள்கலனின் சாரதி வாகனத்தை விட்டுச் வௌியேறியுள்ளதாகவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
